பக்கம்:வாழும் தமிழ்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனை உலகத்து வார்த்தைகள் 187

மாதர் என்ற சொல் பெண்களைக் குறிக்க இப்போது வழங்குகிறது. இயற்கையாக அதற்குக் காதல் என்ற பொருள் இருந்தது. அதிலிருந்து காதலே உண்டாக்கும் பெண்டிருக்கு ஆயிற்று.

வெம்மை என்ற சொல்லுக்கு இப்போது வெப்பம் என்ற பொருள்தான் வழக்கில் உண்டு. பழங் குருலத்தில் அதற்கு விருப்பம் என்ற பொருளும் இருந்தது.

நன்று என்பதற்கு நல்லது என்ற பொருள் நமக்குத் தெரியும். அதற்குப் பெரிது என்ற பொருள் உண்டென்று தொல்காப்பியர் சொல்கிரு.ர். -

விழுமம் என்ற சொல்லுக்குச் சீர்மை, சிறப்பு என்ற பொருளோடு துன்பம் என்ற பொருளும் உண்டு. குழந்தையைப் பெற்ற நிலைக்கு, புனிறு’ என்று ஒரு பெயர் உண்டு. இப்போதுதான் கன்று போட்ட பசுவை, புனிற்ரு என்று சொல்வார்கள்.

அழகைக் குறிக்கும் யாண் என்ற சொல்லும் புதியது உண்டாதலேக் குறிக்கும் யாணர் என்ற சொல்லும் இப்போது மறந்தே போய்விட்டன. கடி என்ற ஒரு சொல்லுக்கே நீக்குதல், கூர்மை, காப்பு, புதுமை, விரைவு, விளக்கம், மிகுதி, சிறப்பு, அச்சம், தெய்வம், ஐயம், கரிப்பு என்ற பல பொருள்கள் உண்டென்று தொல்காப்பியர் கூறுகிரு.ர்.

இப்படிச் சில சொற்களை எடுத்துக் காட்டி அவற்றிற் குரிய பொருளேயும் கூறி, "எல்லா வற்றுக்கும் பொருள் இங்கே சொல்லிக்கொண் டிருப்பது முடியாத காரியம். சொல் வந்திருக்கும் சந்தர்ப்பத்தைப் பார்த்து, முன்னும் பின்னும் வந்த சொற்களேயும் கவனித்து எந்தச் சொல்லால் சொல்லலாமென்று அந்தச் சொல்லாலே ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/196&oldid=646344" இலிருந்து மீள்விக்கப்பட்டது