பக்கம்:வாழும் தமிழ்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 88 வாழும் தமிழ்

மாளுக்கருக்குப் பொருளே உணர்த்த வேண்டும்’ என்று சொல்கிருர். அவர் காலத்தில் தனியே அகராதி இல்லாததால் இப்படிச் சொன்ஞர்.

“இதுவரைக்கும் நான் சொன்ன வார்த்தை களுக்கு நான் சொன்ன பொருளுக்கு மேலும் பொருள் இருக்கலாம். அவற்றைச் சங்கர்ப்பம் நோக்கித் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று ஒரு. குத்திரம் சொல்லியிருக்கிருர். அவ்வளவு படித்து, உலக வாழ்கையையும் ஆராய்ந்த அவருக்கே அப்படி யானுல், காம் எப்படி மொழிக்கு எல்லே கட்டிவிட முடியும்?

உபாத்தியாயர் பாடம் சொல்கிரு.ர். 'சாயல் என்பதற்கு மென்மை என்று பொருள்” என்கிருர். மானுக்கன், “மென்மை என்ருல் என்ன?’ என்று கேட்டால் எப்படி விளக்க முடியும்? 'மெல்லியதாக இருக்கும்’ என்று சொன்னுல் விளங்காது. ஆகவே, அப்படிப் பொருளுக்குப் பொருள் சொல்லிக்கொண்டு போனல் அகற்கு முடிவே இராது. இதையும் தொல்காப்பியர் சொல்கிரு.ர்.

பொருட்குப் பொருள் தெரியின் அதுவரம்பு இன்றே. தமிழ், வாழ்க்கையோடு ஒட்டிய மொழி. அதில் பொருள் தோன்றியபோது சொல் தோன்றியது. வரவரப் புதிய சொற்கள் சில காரணத்தால், தோன்றி யிருக்கும். காரணம் இல்லாமலே பல சொற்கள் இருப்பது இ ய ற் ைக. கா ர.ண ம் இருந்தாலும் அடிப்பட்டு நெடுங்காலமாகி விட்ட பிறகு என்ன காரணம் என்று ஆராய்ந்து தெரிந்து கொள்வது மிகவும் அருமை. சொல் எல்லாவற்றுக்கும். காரணம் தேடிக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். இதையும் தொல்காப்பியர் சொல்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/197&oldid=646346" இலிருந்து மீள்விக்கப்பட்டது