பக்கம்:வாழும் தமிழ்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சொல்வளம்

ஒரு மொழி, மனிதர்களுடைய வாழ்க்கையில் பயன்பட்டு வருமானல் அது வர வர வளர்ந்து கொண்டே போகும். வளர்ச்சி என்பது பலபல நூல் கள் உண்டாவது மாத்திரம் அல்ல. மொழியின் முதற் பயன் கருத்தைப் புலப்படுத்தும் கருவியாக இருப்பது: அதன் பிறகுதான் இலக்கிய இன்பத்தைத் தரும் சிறப்பு வருகிறது. நூல்கள் பெருகுவது மொழி வளர்ச்சிக்கு அறிகுறிதான்; ஆலுைம் இலக்கியப் பகுதியின் வளர்ச்சியென்றே அதைச் சொல் ல வேண்டும். வழக்கு மொழியிலும் வளர்ச்சியிருக்க வேண்டும்.

வழக்கு மொழியில் வளர்ச்சி எ வ் வா று உண்டாகும்? மனிதன் அந்த மொழியைப் பெருக வழங்க வேண்டும்; உலகமெங்கும் பரந்த காட்சிப் பொருள்களைக் குறிக்கும் சொற்கள் அதில் வரவர அதிகமாக வேண்டும். இது வழக்கு மொழியின் புற வளர்ச்சி. உள்ளத்துள்ளே தோன்றும் உணர்ச்சி களைக் குறிக்க வார்த்தைகள் இருக்க வேண்டும். இது வழக்கு மொழியின் அகவளர்ச்சி. இலக்கிய வளர்ச்சி மாத்திரம் அமையும் மொழிகள் இன்றும் உலகில் உள்ளன. வட மொ ழி அத்தகையதே. வழக்கு மொழியில் உள்ள அத்தனேயும் இலக்கிய மொழியில் உண்டு என்று சொல்ல இயலாது. மனித னுடைய உணர்ச்சிகளில் பெ ரு ம் பாலும் நல்ல வற்றையே இலக்கியத்தில காணலாம். சொற்களிலே கூட அவையல் கிளவியாகிய இடக்கர்ச் சொற்களே இலக்கியத்திலே காண முடியாது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/199&oldid=646351" இலிருந்து மீள்விக்கப்பட்டது