பக்கம்:வாழும் தமிழ்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வளம் | 9 |

வாழ்க்கையின் அழகுப் பகுதியையே பெரும் பாலும் இலக்கியம் காட்டுகிறது. அழுக்குப் பகுதி எங்கோ சிறிதளவே இலக்கியத்திலே வருகிறது. நாம் கிராமியமாகப் பேச்சு வழக்கிலே வசைகளாக உபயோகப் படுத்துகிருேமே, அவற்றை இலக்கி யத்திலே காண முடியுமா? த மி ைழ ப் புத்தக வாயிலாகத் தெரிந்துகொண்ட ஒருவனுக்குத் தமிழ் நாட்டில் கால் வைத்தவுடனே எல்லோருடைய பேச்சும் விளங்கும் என்று சொல்லலாமா? புத்தக உலகத்தில் வாழ்ந்தவனுக்கு இலக்கியங்களில் தடை யின்றிச் செல்லும் தகுதி இருக்கலாம். ஆல்ை உலக வழக்கு மொழியில் பல இடங்களில் அவனுக்குப் பொருள் தெரியாமால் விழிக்கும் தடுமாற்றம் நேரும்,

தமிழ்மொழி வழக்கிலும் இலக்கியத்திலும் வளர்ந்துகொண்டு வரும் மொழி. வாழ்விலே புதியனவாக வரும் பொருள்களையும் கருத்துக்களையும் குறிக்கப் புதிய புதிய சொற்கள் வழக்கு மொழியிலே சேர்ந்துகொண்டே வருகின்றன. .

தமிழின் சொல்வளத்துக்குத் தலைமையான காரணம் அது நெடுங்காலமாக இருப்பது. அதனேடு, வாழ்க்கையின் விரிவுக்கு ஏற்ப மொழியிலும் விரிவு தானே அமைவது மற்ருெரு காரணம். வாழ்க்கையின் விரிவு என்பது வாழ்க்கைமுறை பல நாகரிகப் பொருள்களை வரவர அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி விரிவது; அவற்றைப்பற்றிப் பேசவும் சிங்திக்கவும் மொழி பயன்பட்டு விரிவை அடைகிறது. நமக்கு அருகில்உள்ள காட்டிலிருந்தும் தூரத்திலுள்ள காட்டிலிருந்தும் பொருள்களே வருவித்துப் பயன் படுத்துகிருேம். நம்முடைய வீட்டில் பண்டங்கள் பெருகுகின்றன. அந்தப் பண்டங்களிலே பிற நாட்டுப் பொருளே இல்லாமல் வாழ்க்கையை கடத்து பவர்கள் பெரும்பாலும் இல்லே. வாழ முடியாதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/200&oldid=646353" இலிருந்து மீள்விக்கப்பட்டது