பக்கம்:வாழும் தமிழ்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் வடசொல் 197"

போன மொழி அது. இந்த மொழியினத்தை இந்திய ஐரோப்பிய மொழிக் கூட்டம் (Indo-European group of languages) என்று மொழி வரலாற்றை ஆராய்ச்சி செய்கிறவர்கள் குறிப்பார்கள்.

தென்னுட்டில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலேயாளம், துளு என்பவற்றைத் திராவிட மொழிக் கூட்டம் என்று குறிக்கிருர்கள்.

பழங்காலத்தில் இந்த முறையிலே வகைப்படுத்த வில்லை. ஆனல் இலக்கண அமைதியில் வடகாட்டு மொழிகளுக்கும் தென்னட்டு மொழிகளுக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதை அவர்கள் உணர்ந்திருக் தார்கள். எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று வகையிலும் தமிழுக்கென்று சிறப்பான அமைதி ஒன்று இருப்பதை அவர்கள் கவனித்தார்கள்.

ஒரு மொழி இன்ன இனத்தைச் சேர்ந்தது என்று. தெரிந்துகொள்வதற்கு அதன்வாக்கிய அமைப்பே சரியான உதாரணமாக இருக்கும். வெறும் சொற்களே மாத்திரம் வைத்துக்கொண்டு இந்த மொழி இன்ன குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொல்ல முடியாது.

வடமொழியும் தமிழும் தனித்தனியே சிறை யினுற் பிரிக்கப்பட்டு வழங்கி வந்தன என்று சொல்லும் காலம் மிகமிகப் பழைய காலம். காத தத்துவத்திலிருந்து படிப்படியாக மற்றத் தத்து வங்கள் உண்டாயின, சூரிய மண்டலமாகிய பெரிய அக்கினி உருண்டையிலிருந்து பூமி முதலிய உருண்டைகள் சிதறுண்டு பிறந்தன என்ற செய்திகள் சமய நூலிலும் விஞ்ஞான நூலிலும் கண்ட உண்மைகள். அவற்றை நாம் தெரிந்து வைத்துக்கொள்கிருேம் நம்முடைய வாழ்க்கை முறையும் அந்தப் பழைய நிலையும் ஒன்றுக்கொன்று பயன்படும் என்று சொல்வதற்கில்லை. அப்படித்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/206&oldid=646367" இலிருந்து மீள்விக்கப்பட்டது