பக்கம்:வாழும் தமிழ்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 98 வாழும் தமிழ்

தான் வடமொழியும் தென்மொழியும் ஒன்றன் முகத்தை மற்ருென்று நோக்காமல் இயற்கையான பிரிவுக்கு உட்பட்டு வழங்கின என்று சொல்லும் கிலேயும் சரித்திரத்துக்குப் பயன்படும்; நமக்குப் பயன்படாது.

சரித்திர காலத்துக்கு முந்தியே தமிழ் இலக்கிய க ச ல ம் தொடங்கி விட்டது. சரித்திரத்துக்கு எட்டாக காலத்தில் இயற்றப் பெற்றது தொல் காப்பியம். அதாவது, அதன் காலத்தை ஆராய்வதற் குரிய சாதனங்கள் சரித்திர ஆராய்ச்சிக்காரர்களுக்கு இன்னும் கிட்டவில்லை. அத்தகைய தொல்காப்பியத் திலேயே வடமொழித் தொடர்பு தமிழ் காட்டில் எவ்வளவு வேரூன்றி இருக்கிறதென்பது புலப் படுகிறது. வடநாட்டிலிருந்து தென்னுட்டுக்கும் தென்னுட்டிலிருந்து வடநாட்டுக்கும் மக்கள் சென்று தங்கி வாழ்ந்தார்கள். இந்த வாழ்க்கைக்கு இயற்கை யிலும் செயற்கையிலும் தடையொன்றும் இருக்க வில்லே. மக்கள் தம்முள்ளே கலங்து வாழ்ந்தால் கருத்துக்கலப்பும் மொழிக்கலப்பும் அமைவது இயற்கையே.

ஆனல் தமிழ் மொழி தன் மரபை மாற்றிக் கொள்ள வில்லை. வடமொழியிலிருந்து நாளடைவில் அது எவ்வளவோ பொருள்களைப் .ெ ப ற் று க் கொண்டது. இன்று நாம் ஆங்கிலத்திலிருந்து சொல்லும் பொருளும் பெற வில்லேயா? எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் இத்தகைய கலப்பைக் காணலாம். கலப்பு இல்லாத கிலே வாழ்க்கையின் அறிகுறி அல்ல; விரிவு உண்டாவது கலப்பில்ைதான்; ஒடுக்கம் ஏற்படுவது பிரிந்து தனித்து நிற்பதல்ை.

தமிழ் தன் வாக்கிய மரபை இழக்கவில்லை. அதனேடு சார்ந்த தெலுங்கு முதலியவைகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/207&oldid=646369" இலிருந்து மீள்விக்கப்பட்டது