பக்கம்:வாழும் தமிழ்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 வாழும் தமிழ்

தமிழ் முதலிய மண்டல மொழிகளிலும் சாத்திரங்கள் எழுங்தன. ஆனல் அவை கிலேகொள்ள வில்லே. காரணம், வட மொழியிலுள்ள சாத்திரங்கள் இருக்கும்போது மறுபடியும் அதற்குப் பிரதி எதற்காக என்ற எண்ணங்தான். புலமையுள்ளவர்கள் படித்து அறிந்தார்கள்; பிறருக்கும் தெரிவித்தார்கள். ஆகவே மண்டல மொழிகளில் இலக்கிய வளம் மாத்திரம் தடையின்றி வளர்ந்து வந்தது.

இப்படி அமைந்த வாழ்வில் தமிழுக்கென்று ஒரு தனி இடம், வடமொழிக்கென்று ஒரு தனி இடம் அமையவில்லே. இரண்டும் அடுக்கடுத்தே வளர்ந்தன. இரண்டு மொழிகளிலும் வல்லார் பலர் இருந்தனர். ஆகவே, மொழிக் கலப்பு இயற்கை யாகவே அமைந்தது. வடமொழியிலிருந்து பல சொற்கள் மண் ட ல மொழிகளில் கலந்தன; தமிழிலும் கலந்தன. சமயம், இந்தியா அனேத்துக்கும் பொதுவான கலைகள் ஆகிய இத் துறைகளிலே பல சொற்கள் வந்து கலந்தன; பலவகையிலும் கலந்தன. வடமொழி இந்தியாவின் சாத்திர மொழி. தமிழ் காடு நாவலந்தீவைச் சேர்ந்ததுதானே? ஆகவ்ே, அதன் தொடர்பு தமிழுக்கு முரணாக இருக்கவில்லை.

ஆல்ை, தமிழ் தன் மரபு கெடாமல் சொற்களே மாத்திரம் வடமொழியிலிருந்து பெற்றது. பல சொற்களேத் தன்னுடைய இயற்கைக்குப் பொருந்த மாற்றிக்கொண்டது. பல சொற்கள் தமிழா வடமொழியா என்று தெரிந்துகொள்ள முடியாதபடி மாற்றம் அடைந்தன. வடமொழிக்கும் தமிழ்ச் சொற்கள் சென்றன. அம்மொழியைத் தனியே பேசும் கூட்டத்தினர் இல்லாமையால் அதில் அதிகக் கலப்பு ஏற்படவில்லை. இயற்கையாக இணைந்து பழகும் வாழ்க்கையிலேதான் கலப்பு நிகழும் பேச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/209&oldid=646374" இலிருந்து மீள்விக்கப்பட்டது