பக்கம்:வாழும் தமிழ்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் வடசொல் 201

மொழியிலும் கலப்பு ஏற்படும். நூலளவில் நின்ற மொழியில் அவ்வளவு கலப்பு நிகழாது.

"வடசொற்களேத் தமிழில் சேர்த்துக்கொண்டது. எப்போது?’ என்று காலக் கணக்கைக் குறிப்பது எளிதன்று. பழங்காலத்தில் நூலளவில் வடமொழிக் கலப்புக் குறைந்தும் பேச்சில் மிகுந்தும் இருந்திருக்க வேண்டும். இன்றும் பேச்சில் அதிகமாகவே இருக் கிறது. வரவர இலக்கிய மொழிக்கும் பேச்சு மொழிக்கும் இடையிலுள்ள வெளி சுருங்கவேண்டு மென்ற கொள்கை பலப்பட்டு வருகிறது. தமிழ் நூல் வழக்கில் உரை நடைக்கு அதிகமான இடம் அமைந்தது. ஆகவே பேச்சிலே காணும் அளவுக்கு நூல் வழக்கிலும் வடமொழி வந்திருக்கிறது.

வெறும் நூல் வழக்கிலே உள்ள வட சொற்களே மாத்திரம் பார்த்தால், ஏதோ திடீரென்று வட சொற்கள் தமிழில் படையெடுத்து வந்தது போலத் தான் தோன்றும். நூல் வழக்கைக் காட்டிலும் பேச்சு வழக்கில் வடசொற்கள் மிகுதியாக வழங்கியதை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். இதற்குச் சிறந்த சான்ருக இருப்பவை சாசனங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தில் உண்டான நூலே எடுத்து அதில் உள்ள வடசொற்களைக் கணக்கிட்டுப் பாருங்கள். அதே காலத்தில் எழுந்த கல் வெட்டுக்களில் உள்ள வட சொற்களைப் பாருங்கள். கல்வெட்டுக்களில் அவை: மிகுதியாகவே இருப்பது தெரியவரும்.

சொற்கள் வாழ்க்கையோடு ஒட்டிப் பிற மொழியி லிருந்து வந்து புகுவது பேச்சு வழக்கில் அதிகமாக இருக்கும்; நூல் வழக்கில் ஒரளவு இருக்கும். வடசொல் தமிழில் புகுந்தது இயற்கையான நெறி. அதனேத் தொல்காப்பியர் அறிந்து இலக்கணம் வகுத் திருக்கிருர். செய்யுளிலே வழங்கும் கால்வகைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/210&oldid=646376" இலிருந்து மீள்விக்கப்பட்டது