பக்கம்:வாழும் தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வாழும் தமிழ்

வாழ்க்கையை ஒட்டிய மொழியிலும் அவற்றை வேறு. பிரித்து வைக்கவில்லே. மனிதர்களில் அப்படியில்லையே!” பெண் என்ருல் உடல், உடை, அணி, பேச்சு எல்லா வற்றிலும் வித்தியாசம் தெளிவாக இருக்கிறதே.

அஃறிணையில் ஒரு பொருளே ஒன்றன்பால் என்றும் பல பொருள்களைப் பலவின் பால் என்றும் சொன்னர் கள். இப்படி உலகப் பொருள்களே ஐந்து பால்க. ளாகப் பிரித்துச் சொற்களிலும் இந்தப் பிரிவைக் குறித்தனர் தமிழர்.

தொல்காப்பியர் இந்தப் பிரிவை இரண்டு சூத்திரங்களில் சொல்வியிருக்கிருர். ஆணை ஆடுஉ என்றும் பெண்ணே மகடூஉ என்றும் புலவர்கள் சொல்வார்கள். ஆ டு உ ைவ அறியும் சொல், மகடூஉவை அறியும் சொல், பல்லோரை அறியும். சொல் ஆகிய மூன்று பாலேக் குறிக்கும் சொற். களும் உயர்திணேயைச் சார்ந்தவை. ஒன்றை அறியும் சொல், பலவற்றை அறியும் சொல் என்ற அந்த இரண்டு பாலேக் குறிக்கும் சொற்களும் அஃறிணையைச் சார்ந்தவை என்று சூத்திரம் செய்திருக்கிருர் தொல் காப்பியர்.

ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல் பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே ஒன்று அறி சொல்லே, பல அறி சொல் என்று ஆயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே. (சிவனி - சேர்ந்து. உயர்திணையவ்வே - உயர்திணை யைச் சார்ந்தன.)

ஆணை ஆணென்றும் பெண்ணேப் பெண் ணென்றும் சொல்வது வாழ்க்கையை ஒட்டி அமைந்த வழக்கம். ஆனல் சில மொழிகளில் ஒரு விசித்திரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/21&oldid=645955" இலிருந்து மீள்விக்கப்பட்டது