பக்கம்:வாழும் தமிழ்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் பிரிவு 11

செயலைச் செய்த பேர்வழி ஒரு பெண் என்பதை அந்தச் சொல் தெரிவிக்கிறது. செய்த ஆசாமி ஆணென்றும் குறிப்பிடலாம்; வங்தான் என்று சொல்லலாம். அப்படியே, வங்தார் என்று சொல்லி அந்தக் காரியத்தைச் செய்தவர் தனிமனிதர் அல்ல, பலர் என்பதைத் தெரிவிக்கலாம். இதற்கு உதவியாக இருப்பவை அங்த வார்த்தைகளில் இருக்கும் கடைசி எழுத்துக்கள். -

உயர்திணையில் இந்த மூன்று பிரிவைச் சொல்லில் வகுத்த தமிழர் அஃறிணையில் எப்படி வகுத்தார்கள்? ஒன்று, பல என்ற பிரிவோடு நிறுத்திவிட்டார்கள். 'ஏன் ஐயா இந்தப் பட்சபாதம்? என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?

அஃறிணைப் பொருள்களில் ஆண் பெண் வேற் றுமை இல்லையா? உண்டு. விலங்குகளில் இருக்கிறது: மரங்களில் இருக்கிறது. உயிருள்ள பொருள்களி லெல்லாம் இருக்கிறது. அப்படி இருக்க அவற்றை ஏன் வேறு பிரித்துச் சொல்லக் கூடாது?

அஃறிணையில் ஆண் பெண் பிரிவே இல்லை என்பது தமிழர் கொள்கை அல்ல. இயற்கையின் அமைதியை நன்கு உணர்ந்தவர்கள் அவர்கள். ஆனல் பேசும் மொழியிலே இந்தப் பிரிவைச் சுட்டவேண்டிய அவசியம் அதிகமாக இல்லை. வாழ்க்கையில் வேறு .பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் பெரும்பாலும் இல்லாததுதான் அதற்குக் காரணம். குதிரை ஒன்று இருக்கிறது. அது ஆணுலுைம் பெண்ணுலுைம் மனிதனுக்கு ஒரே வகையில் உபயோகப்படுகிறது. ஆண் காய், பெண் காய் இரண்டும் ஒருங்கே வளர்ந்து ஒரே மாதிரியாக உபயோகப்படுகின்றன. விலங்கினத் திலும் மரம் முதலியவற்றிலும் எளிதிலே ஆண் பெண் பிரிவு கண்டுபிடிக்க இயலாது. உயிரற்ற அஃறிணைப் பொருள்களிலோ இந்தப் பிரிவே இல்லை. ஆதலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/20&oldid=645953" இலிருந்து மீள்விக்கப்பட்டது