பக்கம்:வாழும் தமிழ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘0 - வாழும் தமிழ்

பாகவும் மற்ற இனங்களைப்பற்றிய அறிவு அதனினும் குறைவாகவும் இருப்பது இயற்கையே.

தமிழன் உயர்திணையை ஒருவர், பலர் என்று .பிரித்துப் பார்த்தான். அந்த இரண்டில் ஒருவரைப் பின்னும் கூர்ந்து நோக்கினன். ஆண் பெண் என்ற வேறுபாட்டிலே அவன் உள்ளம் சென்றது. வாழ்க்கையில் இந்த உணர்ச்சி இல்லாமல் இருக்குமா? பிறகு உலகமே வளர்ச்சி அடையாதே!

தனி மனிதரில் ஆணென்றும் பெண்ணென்றும் இயற்கையிலே அமைந்த இரண்டையும் வேறு வேருக வழங்கத் தமிழில் இடம் உண்டு. ஆண்பால் பெண்பால் என்று இந்தப் பிரிவுக்கு இலக்கண்க்காரர் பெயர் இட்டிருக்கிருர்கள், பால் என்ருல் பகுதி அல்லது பிரிவு என்று பொருள்.

ஒருவருக்கு மேற்பட்ட பலரை ஆண்கள், பெண்கள், ஆனும் பெண்ணும் கலந்த கூட்டம் என்று பிரிக்கலாம். வாழ்க்கையில் அப்படித் தனித்தனியே பிரிங்து கோஷா வாழ்க்கை நடத்தும் வழக்கம் தமிழருக்கு இல்லை. ஆகவே, பொதுவாகக் கூட்டமான மனிதரை ஒரே பிரிவாக்கி அதைப் .பலர்பால் என்று குறித்தார்கள்.

மனிதர்களின் செயலேக் குறிக்கும் ஒரு வாக்கி யத்தைச் சொன்னுல் அந்த வாக்கியத்திலே குறிப் பிக்கப் பெறும் காரியம் ஒன்று இருக்கும். செய்தவர் இன்னர் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். க்ாரியத்தைக் குறிக்கும் வினைச் சொல்லே மாத்திரம் எடுத்துக்கொண்டு பார்த்தால், அங்தக் காரியத்தைச் செய்தவர் ஆணு பெண்ணு பலரா என்று தெரிந்து கொள்ளலாம். 'வந்தாள்’ என்று ஒரு வினைச் சொல் இருக்கிறது. இது மனித சாதியின் செயல்: வருவதாகிய செயலேக் குறிக்கும் சொல்; அந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/19&oldid=645950" இலிருந்து மீள்விக்கப்பட்டது