பக்கம்:வாழும் தமிழ்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ஆண் பெண் பிரிவு

"தாயும் பிள்ளேயும் ஒன்ருனலும் வாயும் வயிறும் வேறேதான்' என்ற பழமொழியை நாம் பல முறை கேட்டிருக்கிருேம். ம னி த ன் சமுதாய உணர்ச்சியோடு ஒன்றுபட்டு வாழ்ந்தாலும் இயற் கையில் உடம்பும் உயிரும் உள்ளமும் தனித்தனி' மனிதனே ஆக்குகின்றன. தனிமனிதன் தோன்று கிருன். அவன் தன் முயற்சியினல் மற்றவர்களோடு ஒன்றுபட்டுச் சமுதாய உணர்ச்சி பெறுகிருன். சமுதாய உணர்ச்சி இருப்பினும் தனி மனிதன் தன்னந்தனியணுக உணர்ந்து பேசிச் செய்யவேண்டிய செயல்கள் பல உண்டு. இதைத்தான் முன்னே சொன்ன பழமொழி குறிக்கிறது.

ஒன்று ஒன்ருகப் பல பொருள்கள் சேர்ந்தது. உலகம். மனிதன் ஒன்றையும் பார்க்கிருன் பல வற்றையும் பார்க்கிருன் ஒரு மரத்தைப் பார்க் கிருன்; பல மரங்களைப் பார்க்கிருன். ஒருவனப் பற்றிய பேச்சும் பலரைப்பற்றிய பேச்சும் வாழ்க்கை யோடு ஒட்டி வருகின்றன.

மனித இனத்தை உயர்தினையென்றும் பிற வற்றை அஃறினையென்றும் வகுத்துக்கொண்ட தமிழர்கள், அந்த இரண்டு சாதியிலும் ஒன்று, பல என்ற பிரிவைக் கண்டார்கள். அப்படிக் காணும் போது அடிக்கடி பேசிப் பழகி ஒட்டி வாழ்ந்து வரும் தங்கள் இனத்தைப்பற்றிய செய்திகள் விரிவாக அவர்களுக்குத் தெரிய வங்தன. ஓரினத்தைச் சார்ந்த வர்களுக்கு அவ்வினத்தைப்பற்றிய அறிவு மிகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/18&oldid=645948" இலிருந்து மீள்விக்கப்பட்டது