பக்கம்:வாழும் தமிழ்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 குறிப்பின் அழகு

பேச்சு வழக்கிலேகூட நாம் சில சமயங்களிலே கவிதைச் சுவையை இணைத்துப் பேசுகிருேம். சொல்லுக்குச் சொல் அமைத்துப் பொருள் செய்தால் அத்தகைய சந்தர்ப்பங்களிலே கருத்தை உணர்ந்து கொள்ள முடியாது. சொல்லுக்கு ஏற்பட்ட பொரு ளுக்கும் அப்பால் அங்தச் சொற்களின் அமைப்பும் சொல்பவனுடைய கிலேயும் சந்தர்ப்பமும் ஒரு குறிப்பைப் புலப்படுத்தும். சொல்லினல் உணரும் அர்த்தத்தைச் சொற்பொருள் என்றும், அதற்கு மேல் குறிப்பினால் உணரும் அர்த்தத்தைக் குறிப்புப் பொருள் என்றும் சொல்வார்கள்.

இப்படிக் குறிப்பாகப் பொருளேப் புலப்படுத்தும் இடங்களில் சுவை அதிகமாகத் தோன்றும். கவிதையில் இந்தக் குறிப்பை இடத்துக்கும்வகைக்கும் ஏற்றபடி வெவ்வேறு பெயர்கொடுத்துச் சொல்லு கிருர்கள். சொல் இலக்கணத்தில் குறிப்பெச்சம் என்று சொல்வார்கள். பொதுவாக முன்னம் என்று கூறுவ துண்டு, இசையெச்சம் என்பதும் ஒருவகைக் குறிப் புக்குப் பெயர். ஒட்டு என்று கூறும் அலங்காரம் ஒன்று உண்டு; அதுவும் குறிப்பினுல் பொருளேத் தெரிவிக்கும் முறை இறைச்சி என்றும், உள்ளுறை உவமம் என்றும் கூறும் அகப்பொருள் இலக்கணப் பகுதிகளும் குறிப்பைச் சார்ந்தனவே. வடமொழியில் தொனி என்பதும் ஒருவகைக் குறிப்பே.

கவிதையில் மாத்திரம் இங்தக் குறிப்பு அமைவது என்று நினைக்கக்கூடாது. பேச்சு வழக்கிலும் குறிப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/212&oldid=646380" இலிருந்து மீள்விக்கப்பட்டது