பக்கம்:வாழும் தமிழ்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வாழும் தமிழ்

இருக்கிறது. கவிதையில் அதிகமாக இருப்பதால் அதைத் தனியே சுவைக்க முடிகிறது. ஆலுைம் அப்படி ஒரு சுவை இருப்பதை மக்கள் பேச்சு வழக்கி லிருந்துதான் உணர்ந்துகொண்டிருக்க வேண்டும்.

உலகத்தில் அழகெல்லாம் ஓரிடத்திலே திரண்டு இருப்பது அரிது. கலைஞனே அந்த அழகைத் தனித் தனியே கண்டு இன்புற்றுத் தன் படைப்பிலே அழகை எல்லாம் ஒன்று சேர்த்துக் கலேப்பொருளே ஆக்கு கிருண். சித்திர வல்லுநன் அங்கங்கே கண்ட அழகை யெல்லாம் திரட்டி ஓர் அழகியைத் திட்டுகிருன். கவிஞனே அங்கங்கே கண்ட கல்லியல்புகளே ஒன்று சேர்த்துப் பாத்திரங்களே அழைக்கிருன். சுவையுள்ள பொருள்கள் இயற்கையில் சிதறுண்டு கிடக்கின்றன. அவற்றைத் திரட்டி உருக்கொடுத்து அமைப்பது கலைஞன் வேலே. -

இயல்பான பேச்சு வழக்கில் குறிப்பினலே சுவை உண்டாவதைத் தொல்காப்பியர் கண்டிருக்கிரு.ர். ஆகவே, வழக்குக்கும் செய்யுளுக்கும் பொதுவாக அவர் இலக்கணம் அமைத்திருக்கிரு.ர். -

முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே இன்ன என்னும் சொன்முறை ஆன என்று அவர் சொல்கிருர், "இந்தப் பொருள் இத் தகையவை என்று சொல்லும் முறையிலே, சொல் லுக்குச் சொல் வைத்துப் பொருள் உணர்வதற்குப் புறம்பே, சொல்பவனுடைய குறிப்பினால் பொருள் உணர்த்தும் பேச்சும் உண்டு’ என்பது இதன் பொருள். -

“அவன? அவன் உப்பில்லாமலே கலக்கஞ்சி

குடிப்பவனுயிற்றே!” என்று ஒருவனேப்பற்றிச் சொல்கிருேம். சொல்லுக்குச் சொல் வைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/213&oldid=646382" இலிருந்து மீள்விக்கப்பட்டது