பக்கம்:வாழும் தமிழ்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பின் அழகு - 205

பொருள் பண்ணிப் பார்த்தால், அவனுடைய வயிற்றின் அளவுதான் நமக்குத் தெரியவரும். ஆனல் அப்படிச் சொல்வதற்குப் பொருள் என்ன்? அவன் கஞ்சி குடிப்பவன் என்று சொல்லவந்தது அல்ல அது; கலக்கஞ்சி குடிப்பவன் என்று அளவு காட்டவும் வந்தது அல்ல. சிறிதளவு கஞ்சி குடித்தாலும் மனித லுக்கு உப்பு வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கக் கலக்கஞ்சியை எப்படி உப்பில்லாமல் குடிப்பது கலக் கஞ்சி என்ற அளவே மனிதன் ஆற்றலுக்கு மேற்பட்டது. மற்ற மனிதர்கள் செய்யும் அளவுக்கு மேலே தக்க கருவி இல்லாவிட்டாலும் செய்யும் ஆற்றல் படைத்தவன் அவன் என்ற பொருளேத்தான் முன்னே சொன்ன வாக்கியம் புலப்படுத்துகிறது. இந்தப் பொருளைத் தரும்படி, இவன் மற்றவர் களால் செய்ய முடியாததைச் செய்து விடுவான்’ என்று சொன்னல் உள்ளது உள் ள ப டி யே சொன்னதாக இருக்கும். ஆனால் இது சப்பென்றிருக் கிறது, உப்பில்லாத கஞ்சிபோல், உப்பில்லாமல் கலக்கஞ்சி குடிப்பான்’ என்று இதே கருத்தை வேறு வகையிலே சொல்லும்போது, பொருளேத் தெரிந்து கொள்வதோடு அந்தப் பேச்சிலே தனி இன்பத்தையும் காண முடிகிறது. பொருளே உணர்த்தும் முறையிலே இன்பம் காண வைப்பது கவிதையின் இயல்பு. அந்த இயல்பு பேச்சு வழக்கிலும் அங்கங்கே காணப் படுவதுண்டு. பேச்சு வழக்கிலே அதைச் சுவைத்த மனிதன் ருசிகண்ட பூனேமாதிரி அந்தச் சுவையை மிகுதியாகக் கொண்ட கவிதையை நாடுகிருன். இருப்பைப் பூவிலே இனிப்பைச் சுவைத்தவன், பிறகு கரும்பையும், அப்பால் வெல்லக் கட்டியையும் உண்ண ஆசைப்படுகிருன் அல்லவா?

'உப்பில்லாமல் கலக்கஞ்சி குடிப்பான்’ என்ற வாக்கியத்தில் உள்ள முறையைக் கவிதையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/214&oldid=646385" இலிருந்து மீள்விக்கப்பட்டது