பக்கம்:வாழும் தமிழ்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 வாழும் தமிழ்

நன்ருக அமைத்துச் சுவை உண்டாக்குகின்றனர் புலவர்கள்.

இ8ளதாக முள்மரம் கொல்க; களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து

என்பது ஒரு குறள். சொல்லுக்குச் சொல் வைத்துப் பொருள் பண்ணிப் பார்க்கலாம் 'முள் மரத்தை அது இளஞ்செடியாக இருக்கும்போதே வேரோடு பிடுங்கி எறியவேண்டும்; அப்படிச் செய்யாமல் அது வளர்ந்து மரமாகி முற்றிவிட்டால், அதை வெட்டுபவ ருடைய கையைத் தொலேத்து விடும்” என்று இதற்குப் பொருள் ஏற்படுகிறது. திருவள்ளுவர் இந்தக் குறளே அரசன் இன்னபடி யெல்லாம் ஆட்சி புரியவேண்டும் என்று சொல்லும் பகுதியிலே அமைத் திருக்கிருர். பகைவர்களைப் பற்றி நன்ருகத் தெரிந்து கொண்டு. அவர்களே அழிக்கும் உபாயமும் தெரிய வேண்டும் என்பதைச் சொல்லும், பகைத்திறங் தெரிதல்” என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் வருகிறது.

அரசன் பகைவர்களே அழிக்கும் முறைகளைக் சொல்லி வந்த இடத்தில் முள் மரத்தைப்பற்றிச் சொல்லக் காரணம் இல்லை. கெல் விளையும் பூமியிலே நடுவில் ஒரு கருவேலஞ்செடி முளேக்கிறது. அதைப் பார்த்த பெரியவர் ஒருவர் நிலக்காரனேப் பார்த்து, "அப்பா, அதை வளரவிடாதே இப்போதே வெட்டி எறிந்துவிடு. பெரியதாகப் போனல் கோடாலி போட்டுப் பிளக்க வேண்டியிருக்கும்” என்று சொன்னர். இப்படி ஒரு கதையோ, காட்சியோ வந்தால் இந்தப் பாட்டை அங்கே வைக்கலாம்: பொருத்தமாக இருக்கும். அரசனைப்பற்றிய செய்தி களைச் சொல்வதற்கிடையே இதற்கு என்ன வேலே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/215&oldid=646387" இலிருந்து மீள்விக்கப்பட்டது