பக்கம்:வாழும் தமிழ்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 பழமையும் புதுமையும்

மனித சாதி மேன்மேலும் வளர்ந்துகொண்டே வருகிறது. வளர்ச்சிக்கு அறிகுறி புதிய புதிய பொருள்களேச் சேமிப்பதும் .ே ம ன் ேம லு ம் செய்கையில் ஊன்றி நின்று இயங்குவதும் ஆகும். அப்படி வளர்ந்து வருகையில் பல வழக்கங்கள் மாறும் ; பலபுதியனவாக உண்டாகும். ஆடையிலும் ஆபரணக் திலும், உணவிலும் உ ைற யு ளி லு ம் இந்த மாற்றத்தைக் காணலாம். பழைய பொருள்களில் பல மறைந்து போயின. புதிய பொருள்கள் பல வங்து வழங்குகின்றன.

மனிதனுடைய மொழியும் இந்த மாற்றத்துக்கு உட்படுவதுதான். நெடுங்காலமாக வாழ்ந்து உரம் பெற்ற மொழியில் தலே கீழான மாற்றங்கள் உண்டாவதில்லே. புதிய மொ ழி க ளி ல் தா ன் வளர்ச்சியும் மாற்றமும் திடீர் திடீரென்று அமையும். மனிதன் சிறு பருவத்தில் விறுவிறுவென்று வளர் கிருன். காற்பது வயசுக்குமேல் அந்த வேகம் இராது. காலங்கண்ட மொழியில் மா ற் ற ம் நிதானமாகத்தான் ஏற்படும்.

தமிழில் மாற்றம் மெல்லமெல்ல உண்டாவது தான் அதன் கன்னித் தன்மைக்கு இயல்பு. வளருகின்ற மொழியாதலால் மாற்றம் இல்லாமலே இருக்க வகையில்லே, பல பழைய மரபுகள் முற்றும் மாறின; பலவற்றின் பகுதிகள் மாறின; பல புதிய அமைதிகள் புகுந்தன. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/219&oldid=646395" இலிருந்து மீள்விக்கப்பட்டது