பக்கம்:வாழும் தமிழ்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையும் புதுமையும் 2俳霍

தமிழ் மொழிக்கு இலக்கணம் வ குத் த. பெரியார்கள் இந்த இயல்பை கன்கு தேர்ந்திருந்தனர். வளர்ச்சி பெருத மொழியில் இப்படித்தான் வரும் என்று வரையறை செய்துவிடலாம். செத்துப்போன பிணத்தைச் சமாதி செய்வது போன்ற காரியம் அது. வளரும் மனிதனுக்கு வீடு கட்டலாம். உண்ண உறங்க அறை கட்டிக் கொடுக்கலாம். சில வேளை களில் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்திருக்கும். நியதியை உண்டாக்கலாம். வீடுகளில் அறைகளில் மனிதன் வாழ்கிருன்; பாதைகளில் நடக்கிருன். இந்த இடங்களில் எல்லாம் வரையறை இருக் கின்றது. வீட்டுக்கு எல்லேயும், அறைக்குச் சுவர். களும், பாதைக்கு இருபுறமும் ஒழுங்கு செய்யப் பெற்றிருக்கின்றன. இக்க ஒழுங்கு இருப்பதனல் மனிதன் இன்பம் பெறுகிருனே அன்றித் துன்பம் அடைவதில்லே. இலக்கணம் என்பது ஒழுங்குபடுத்திய பகுதி; இலக்கியம் வாழ வகைசெய்த பகுதி. வீடு' போதாவிட்டால் சி ல பகுதிகளே இடித்தோ கூட்டியோ பெரிது ஆக்குவதுபோல இலக்கணத் திலும் செய்யலாம். அப்படிச் செய்து வந்திருக் கின்றனர் பெரியோர். அவ்வாறு செய்வது தவருக இருந்தால் இன்று அகத்தியமோ அதற்கு முன்பு இருந்த இலக்கணமோதான் வழக்கில் இருக்க வேண்டும், தொல்காப்பியத்துக்குத் தேவையே இராது. அதன்பின் ஒ வ் .ெ வா ரு பகுதியிலும் தோன்றிய இலக்கண நூல்களுக்கும் இடமே இல்லை. புதிய வழக்கம் இலக்கணத்தை நோக்கி உண்டாக வில்லை. வழக்கத்தை நோக்கித்தான் இலக்கணம் உண்டாகிறது. இதனே அறிந்தே அந்த அங்தக் காலத்துக்கு ஏற்றபடி புதிய புதிய இலக்கணங்கள் எழுந்தன.

பழைய இலக்கண நூல்களில், புதுமைக்கு. வரவேற்புக் கூறியிருக்கிரு.ர்கள். பழமைக்குப் பிரிவு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/220&oldid=646397" இலிருந்து மீள்விக்கப்பட்டது