பக்கம்:வாழும் தமிழ்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 12 வாழும் தமிழ்

உபசாரமும் கூறியுள்ளனர். தொல்காப்பியருக்கு முன் வழங்கிய மரபுகளிற் சில அவர் காலத்தில் மறைக் திருக்கலாம். அவற்றை அவர் கூறவில்லே. அப்படியே தொல்காப்பியர் காலத்து வழக்குகள் பல பிற் காலத்தில் ம ைற ங் து போயின. சிலவற்றைப் பார்க்கலாம்.

நாம் பேசும்போது சில வார்த்தைகள் தக்கை போலப் பொருளின்றி. அடிக்கடி வரும். அங்த வார்த்தைக்குக் தனியே ஒரு பொருள் இருக்கும். ஆனலும் நம்முடைய பேச்சில் வெறும் சொல்லாகப் பேசும்போது காக்குக்கு அனேபோல உதவும் ஒலியாக நிற்கும். சிலருக்குச் சில சொல் இப்படித் தக்கை போலப் பயன்படும். இருக்க என்பதை அடிக்கொரு தரம் பேச்சினிடையே பொருள் இல்லாமல் சொல்ப வர்களே நாம் பார்த்திருக்கிருேம்.

ஒரு சோதிடர் இருந்தார். அவருக்கு ஒரு சொல் தக்கையாக உதவும். எது பேசிலுைம் அந்தப் பேச்சினிடையே போகட்டும் என்ற சொல், பொருளின்றியே வரும்.

“என்ன ஜோசியரே, எனக்கு இந்த மாதம் சம்பளம் அதிகமாயிற்று. உங்கள் வாக்குப் பலித்தது’ என்று சொன்னல், 'அப்படியா! போகட்டும். இன்னும் மேலும் மேலும் இப்படியே உயரட்டும்' என்று சொல்வார். - -

நெடுநாட்களாகக் குழந்தை இ ல் லா த செல்வருக்குக் குழந்தை பிறந்தது. சோதிடரிடம் வந்தார். "ஜோசியரே, ஆண்டவன் கிருபையால் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. ஜாதகம் கணிக்க வேண்டும்” என்று சொன்னர். சோதிடர், ‘அப்படியா. போகட்டும்; போகட்டும் நிமிஷத்தில் எழுதிக் தருகிறேன்" என்ருர். குழந்தை பிறந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/221&oldid=646400" இலிருந்து மீள்விக்கப்பட்டது