பக்கம்:வாழும் தமிழ்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையும் புதுமையும் - 2 13:

என்று சொன்னல், அது வாழ்க என்று வாழ்க்காமல், போகட்டும் என்று சோதிடர் சொன்னதற்குப் பொருள் இருந்தால், பணக்காரர் சோதிடரைச் சரியானபடி பதம் பார்த்திருப்பார். ஆனல் அந்த வார்த்தைக்கு அர்த்தம் இல்லையென்பது சோதிடரோடு: பழகுகிறவர்கள் யாவருக்கும் தெரியும்.

இவ்வாறு தனி மனிதருடைய பேச்சில், அடிக்கடி பொருளற்றும் சில சமயங்களில் பொரு, ளுடனும் வரும் சொற்களே, மேனரிஸம் என்று. ஆங்கிலத்தில் வழங்குவார்கள்.

பொருளில்லாமல் வழங்கும் சொற்களுக்குக் தமிழ் இலக்கணத்தில் அசை நிலை என்று பெயர் கொடுத்திருக்கிருர்கள். நாடு முழுவதும் வழங்கும் சொற்களே இலக்கணத்தில் எடுத்துச் சொல்லி யிருக்கிருர்கள். அடே அப்பா’ என்று ஆச்சரியப் படுகிருேம், அங்கே அப்பா என்ற சொல்லுக்கு உரிய தங்தையே என்ற பொருள் இல்லை. அது வியப்பைத் தெரிவிக்க வங்த ஒருவகை அசைச் சொல். -

பழங்காலத்தில் கண்டீர், கேட்டீர். சென்றது, போயிற்று என்ற வார்த்தைகள் கேள்வியோடு: சேர்ந்து தக்கைகளாக வழங்கி வந்தனவாம். இந்த நான்கு அசைச்சொற்களையும் தொல்காப்பியர் ஒரு சூத்திரத்தில் எடுத்துச் சொல்லுகிருர் மற்ருெரு குத்திரத்தில் கேட்டை, நின்றை, காத்தை, கண்டை என்ற நான்கு அசைச்சொற்களை எடுத்துரைக்கிருர்,

ஒருவன் ஏதாவது சொன்னல் அதை மறுப்ப தற்குக் கண்டீர், கேட்டீர், என்ற சொற்கள் வருமாம். . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/222&oldid=646402" இலிருந்து மீள்விக்கப்பட்டது