பக்கம்:வாழும் தமிழ்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 14 வாழும் தமிழ்

'நேற்று நீ இங்கே வந்தும் என்னேப் பார்க்க வில்லே' என்று ஒருவன் சொல்கிருன்.

'கண்டிரே, கண்டீரே கேட்டீரே, கேட்டீரே" என்று அவன் பதில் சொல்கிருன். பழங்காலத்தில் இப்படிச் சொன்னல், "நான் வரவில்லே’ என்று பொருள்கொள்ள வேண்டும்.

இந்தச் சொற்கள் யாவும் தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பு மறைந்து போயின.

ஒருவனிடம் ஒருவன் ஒரு பொருக்ளக் கேட்கும் போது மூன்று விதமாகக் கேட்கலாம். ஈ, கா, கொடு என்ற மூன்று சொற்களும் ஒரே பொருளை உடையன. ஆலுைம் அந்த மூன்றுக்கும் வேறுபாடு உண்டு. -

உயர்ந்தவனிடத்தில் இழிந்தவன் கேட்பதானுல் ஈ யென்று கேட்பானம். ஈ என்ற சொல்லேச் சொல்லும்போது பல்லே இளிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, அங்தச் .ெ சா ல் லி ன் உச்சரிப்பே, “பல்லெல்லாம் தெரியக் காட்டும்’ இழிந்தவனே கினைப்பு மூட்டுகிறது. தனக்குச் சமானமானவனிடத் தில் கேட்கும்போது, 'கா' என்று கேட்பது மரபாம். உயர்ந்தவன் தாழ்ந்தவனிடத்தில், 'கொடு’ என்று கேட்பாளும், இந்த வரையறை நன்னூலார் காலம் வரையில் இலக்கணத்தில் இருந்தது. இலக்கியத் திலும் பேச்சிலும் இந்தப் பழைய சம்பிரதாயம் கெடுங்காலத்துக்கு முன்பே மறைந்து போயிற்று.

இலக்கணம் வ கு த் த வர் க ள் தம்முடைய இலக்கணத்துக்குள்ளே எல்லாவற்றையும் சொல்லி விட்டோம் என்று முடிவு கட்டுவதே இல்லை. விதி யென்று இருந்தால் அதற்கு விலக்கும் உண்டு என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/223&oldid=646404" இலிருந்து மீள்விக்கப்பட்டது