பக்கம்:வாழும் தமிழ்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையும் புதுமையும் - 2 45

அறிந்து அத்தகைய விலக்குகளேப்பற்றி இடங் தோறும் சொல்லியிருக்கிருர்கள்.

தொல்காப்பியர் சொல்லதிகாரத்தின் இறுதிப் பகுதியில் இத்தகைய விலக்குகளைச் சொல்கிருர். ஒரு பெயரைச் சொன்னல் அந்தப் பெயரைப் பிரித்துப் பார்த்து அதற்குரிய பொருள் கொள்வதற்கு இலக் கணம் உதவுகின்றது. அப்படிப் பிரித்துப் பார்க்காமல் வெறும் பெயரளவிலே கொள்வதற்குரிய சில பெயர் களும் உண்டு. அங்கே இலக்கண விதி பயன்படாது. எண்ணெய் என்ற சொல் எள்ளிலிருந்து எடுக்கும் கல்லெண்ணெய்க்குப் .ெ ப ய ரா. க ஏற்பட்டது. நாளடைவில் பலவற்றுக்குப் பொதுவாக வழங்கத் தொடங்கியது. மண் எண்ணெய் என்று சொல் கிருேம், அங்கே எண்ணெய் என்பதைப் பிரித்து எள் நெய் என்று ஆக்கிப் பொருள் கொண்டால் பைத்தியக்காரத்தனமாக முடியும். எண்ணெய் என்பதை முழுவதும் ஒரு பெயராகக் கொள்ள வேண்டும். திசைச்சொற்களிலும் இலக்கணத்துக்குப் புறம்பான வழக்குகள் உண்டு. பழைய மரபிலே பல உண்டு. ஒருமைக்குப் ப ன் ைம யு ம் பன்மைக்கு ஒருமையுமாக அடிப்பட்டு வழங்கும் சில வழக்கு உண்டு. மங்திர சம்பந்தமான பகுதிகளில் இலக்கணத் துக்கு வேலேயே இராது. இவற்றை யெல்லாம் எடுத்துச் சொல்லி, இவைகளே யெல்லாம் வழங்கிய வாறே கொள்ள வேண்டும்; இலக்கணத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டுமென்ருல் முடியாத காரியம்’ என்று வகுக்கிருர் தொல்காப்பியர்.

- புதியன புகுவதற்கும் வழி கோலுகிருர். 'கடிசொல் இல்லே காலத்துப் படினே' என்பது ஒரு குத்திரம். அவ்வக்காலத்துத் தோன்றி நன் மக்கள் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வழங்கப்பட்டு வருமாயின் இவை தொன்றுதொட்டு வங்தன அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/224&oldid=646407" இலிருந்து மீள்விக்கப்பட்டது