பக்கம்:வாழும் தமிழ்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உளளுறை

தொல்காப்பியத்தில் உள்ள சொல்லதிகாரத்தில் ஒன்பது இயல்கள் இருக்கின்றன. 468 சூத்திரங்களே உடையது இவ்வதிகாரம். பெயர், வினை, இடை, உரி என்ற நான்குவகைச் சொற்களைப் பற்றிய இலக்கணத்தைக் கூறுவது இப்பகுதி. முதல் இயலாகிய கிளவி யாக்கமும், இறுதி இயலாகிய எச்ச இயலும் நால்வகைச் சொற் களுக்கும பொதுவான செய்திகளைத் தெரிவிப்பன. பெயரைப்பற்றியும், அதளுேடு சேர்ந்த வேற்றுமைகளைப் பற்றியும் நான்கு இயல்கள் சொல்லுகின்றன. மற்ற மூன்றும் வினை, இடை, உரி என்பவற்றைப்பற்றித் தனித் தனியே சொல்கின்றன. .

கிளவிஆக்கம் என்பது சொ ற் க ள் எவ்வாறு பொருளைக் குறிக்கப் பயன்படுகின்றன என்பதைப் பொது வகையில் சொல்வது. இதில் உள்ள சூத்திரங்கள் 61. இப்பகுதியில்வரும் இலக்கணச் செய்திகளிற் சில: மக்கள் உயர்திணையைச் சார்ந்தோர்; பிற பொருள்கள் அஃறிணை. உயர்திணை மூன்று பாலாகவும் அஃறிணை இரண்டு பாலாகவும் பிரிக்கப்பெறும். அலிகளைக் குறிக்க வரும் பெயர்களும் தெய்வப் பெயர்களும் தமக்கென்று வரை யறையாக ஒரு பாலைப் பெருவிட்டாலும், உயர் திணையில் தமக்கு ஏற்ற பாலேக் குறிக்கும் உருவில் வழங்கப்பெறும். இனத்தைச் சுட்டும் அடைமொழி வழக்கிலும், இனத்தைச் சுட்டாத அடைமொழி செய்யுளிலும் வரும். இயற்கைப் பொருள், செயற்க்ைப் பொருள் என்ற வேறு பாடு தெரியச் செயற்கைக்கு ஆக்கச் சொல்லைச் சேர்த்துச் சொல்வர். ஐயம் உண்டானலும் ஐயம் தெளிந்தாலும் அவற்றை வெளியிடும் ஒழுங்கு உண்டு. ஒருவரைப் பலராகச் சொல்வதும் ஒன்றைப் பலவாகச் சொல்வதும் வழக்கில் உயர்த்திச் சொல்ல வந்தவை. - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/226&oldid=646411" இலிருந்து மீள்விக்கப்பட்டது