பக்கம்:வாழும் தமிழ்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை 2 : 9

வெகுளுதல், செறுதல், உவத்தல், கற்றல், அறுத்தல், குறைத்தல், தொகுத்தல், பிரித்தல், கிறுத்தல், அரித்தல், எண்ணுதல், ஆக்குதல், சார்தல், செல்லுதல், கன்றுதல், நோக்குதல், அஞ்சுதல், கிடைத்தல்.

மூன்ரும் வேற்றுமையின் உருபு ஒடு. அது கருவியைக் குறிக்க வரும். அதனின் இயறல் முதலிய வற்றைப் பயனிலையாகவுடையது அது.

நான்காம் வேற்றுமை உருபு கு. ஒன்றை ஏற்று கிற்கும் பொருளைக் குறிப்பது அது. இன்னதற்கு இது பயன்படும் என்பது போலப் பல வகையில் இது வழங்கும்.

ஐந்தாம் வேற்றுமை இன் என்னும் உருபால் குறிப்பிக்கப் பெறுவது; ஒப்பு நோக்குங்கால் வருவது. ஒப்பு நோக்கப்படுவன இன்னவை என்பதை ஒரு சூத்திரத்தில் ஆசிரியர் சொல்கிருர், வண்ணம், வடிவு, அளவு, சுவை, தண்மை, வெம்மை, அச்சம், நன்மை, தீமை, சிறுமை, பெருமை, வன்மை, மென்மை, கடுமை, முதுமை, இளமை, சிறத்தல், இழித்தல், புதுமை, பழமை, ஆக்கம், இன்மை, உடைமை, நாற்றம், தீர்தல், பன்மை, சின்மை, பற்று விடுதல் என்பன அவை,

ஆரும் வேற்றுமை அது என்பதை உருபாக உடையது; உரிமையைக் குறிக்க வருவது. உரிமை பாராட்டும் பொருள்கள் இன்னவையென்று விரித்துக் கூறுகிருர் இயற்கை, உடைமை, முறைமை, கிழமை, செயற்கை, முதுமை, வினை, கருவி, துணை, கலம், முதல், உறுப்பு, குழு, தெரிந்து மொழிச் செய்தி, கிலே, வாழ்ச்சி என்பன அவை. -

ஏழாம் வேற்றுமை உருபு கண் என்பது. இன்ன கிகழும்போது என்றும், இன்ன இடத்தில் என்றும், இன்ன காலத்தில் என்றும் குறிக்க இது வரும். கண் என்பதைப் போல, கால், புறம், அகம், உள், உழை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/228&oldid=646416" இலிருந்து மீள்விக்கப்பட்டது