பக்கம்:வாழும் தமிழ்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 - வாழும் தமிழ்

கீழ், மேல், பின், சார், அயல், புடை, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, முன், இடை, கடை, தலை, வலம், இடம் முதலியன வரும். இச்சொற்கள் யாவும் ஒரு பொருளைச் சார்ந்த இடத்தின் வகைகளாக இருப்பதை உணர்க.

மூன்ருவதாகிய வேற்றுமை மயங்கியல் என்பது ஒரே நிலையை வெவ்வேறு வேற்றுமைகளைச் சொல் வதையும், ஒரு வேற்றுமை உருபுக்கு வேருெரு வேற்றுமை உருபு வருதலையும், வேற்றுமை சம்பந்தமான பிற செய்தி களையும் சொல்கிறது. இதில் உள்ள சூத்திரங்கள் 34.

இரண்டாம் வேற்றுமை வரும் இடங்கள் சிலவற்றில் ஏழாம் வே ற் று ைம யு ம் வரும். உ-ம். அரசரைச் சார்ந்தான், அரசர்கட் சார்ந்தான்; கோட்டைக் குறைத்தான், கோட்டின்கட் குறைத்தான்.

உடன் நிகழ்ச்சிப் பொருளில் வரும் ஒடு என்ற உருபு உயர்ந்த பொருளோடு வரும். உ-ம். ஆசிரியனெடு மாளுக்கர் வந்தார்.

புலி கொல் யானை என்பதைப் புலியைக் கொன்ற யானை, புலியாற் கொல்லப்பட்ட யானை என்று இரண்டு வகையாக விரித்துப் பொருள் கொள்ளலாம். இதனைத் தடுமாறு தொழிலென்று கூறுவர். இத்தகைய தடுமாறு தொழில் வரும்போது பின்னே வரும் பெயரோடு சேர்த்துச் சொல்லும் சொல்லினல் தடுமாற்றம் நீங்கித் தெளிவு பிறக்கும். (உ- ம்.) புலி கொல் யானை ஓடுகின்றது.” ஓடுகின்றது என்ற சொல் புலியைக் கொன்ற யானை என்ற விளக்கத்தைத் தருகின்றது. ‘புலி கொல் யானைக் கொம்பை விற்கிருன்’ என்ருல் புலியாற் கொல்லப்பட்ட யானை என்பது தெளிவாகிறது. -

ஆகுபெயர்கள் இத்தன வகையென்பதும் இவ்வாறு வரும் என்பதும் இவ்வியலிற் சொல்லப்படுகின்றன. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/229&oldid=646418" இலிருந்து மீள்விக்கப்பட்டது