பக்கம்:வாழும் தமிழ்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 வாழும் தமிழ்

முரஞ்சல், முழுது, முனைவு: யாணர், யானு; வம்பு, வய, வயா வறிது, வார்தல், வாள், விதிர்பு, வியல், விழுமம், விறப்பு, வெம்மை, வெறுப்பு, வை.

எச்சவியல் முன்னே உள்ள இயல்களில் எடுத்துச் சொல்லாத சொல் இலக்கணங்களை யெல்லாம் தொகுத்துச் சொல்கின்றது. எ ஞ் சி ய வ ற் ைற ச் சொல்வதால் எச்சவியல் என்னும் பெயர் பெற்றது. இதில் உள்ள சூத்திரங்கள் 67. இதில் உள்ள செய்திகளில் முக்கியமானவை வருமாறு: - -

செய்யுளுக்குரிய சொற்கள் இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என்று நான்கு வகைப்படும். அந்த நான்கில் செக்தமிழ் கிலத்தில் வழங்கும் வழக்கோடு பொருந்தியிருக்கும் சொற்கள் இயற்சொற்களாம். ஒரே பொருளைத் தரும் பல சொற்களும், பல பொருளையுடைய ஒரு சொல்லும் என்று திரிசொற்கள் இரண்டு வகைப் படும். செந்தமிழ் கிலத்தைச் சார்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் கிலங்களில் சிறப்பாக வழங்குவன திசைச் சொற்கள். ஆரிய மொழிக்கே உரிய சிறப்பெழுத்துக்கள் இன்றி, தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்தால் அமைந்த ஆரியச் சொற்கள் தமிழில் வழங்குவன வடசொல்லாகும். - -

ஒரே வார்த்தை ஓசையின்பத்தின் பொருட்டு நான்கு தடவை அடுக்கி வரும். விரைவைச் சுட்டும் பொருட்டு மூன்று முறை வரலாம். அவையிலே பேசத்தகாதவற்றை மறைத்து வேறு தக்க சொற்களால் சொல்லவேண்டும். ஒருவனிடம் ஒரு பொருளை இரக்கும்போது அவனிலும் தாழ்ந்தவன் ஈயென்பதும், ஒப்பானவன் தா என்பதும், உயர்ந்தவன் கொடு என்பதும் மரபு. பேசும் வார்த்தை களாலல்லாமல் பேசுபவனுடைய குறிப்பை அறிந்து பொருளைத் தெரிந்துகொள்ளும் சொற்களும் உண்டு.

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/233&oldid=646427" இலிருந்து மீள்விக்கப்பட்டது