பக்கம்:வாழும் தமிழ்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*16 வாழும் தமிழ்

வந்தாள் போனுள் என்று சொல்வதைக்கொண்டு 'இப்படிப் பேசும் தமிழனுக்கு அலியின் லட்சணம் தெரியவில்லை என்று நினைக்காதே. பைத்தியக்காரத் தமிழன் தெய்வத்தையும் தன்னைப்போல வேட்டியும் புடைவையும் கட்டுவது என்று நினைத்துவிட்டா னென்று பரிகாசம் செய்யாதே. அந்தப் பாற்பிரிவைக் குறிக்கும் குறியீடுகள் அவர்களுக்கு உரியவை அல்ல; கடன் வாங்கிக்கொண்டவை' என்று அவர் இதன் மூலம் சொல்லாமற் சொல்லவில்லையா? 'கடவுள் இந்த அவதாரம் எடுத்ததல்ை இதுதான் அவர் திருவுருவம் என்று மயங்காதே, கம்மைப் போலப் பெண்டு பிள்ளைகளுடன் வாழ்பவரென்று ஏமாந்து போகாதே. எல்லாம் வேஷம்; நமக்காக, காம் உய்வதற்காக, கடன் வாங்கிக்கொண்டவை' என்று சமய குரவர்கள் சொல்வதுபோல இருக்கிறதல்லவா இது? ஆம், ஒன்று சொல்லேப் பற்றிய தத்துவம்; மற் ருென்று பொருளேப்பற்றிய தத்துவம். சொல்லின்றிப் பொருள் இல்லை; பொருளின்றிச் சொல் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/25&oldid=645964" இலிருந்து மீள்விக்கப்பட்டது