பக்கம்:வாழும் தமிழ்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

கேள்விகள்

பட்டுக்கோட்டைக்கு வழி எது என்ருல் கொட்டைப் பாக்குப் பத்துப் பலம் என்கிருன்’ என்பது ஒரு பழமொழி. கேட்கிற கேள்வியை வாங்கிக்கொள்ளாமல் எதையோ விடைபோலச் சொல்வதைப் பரிகாசம் செய்ய எழுந்தது, அந்தப் பழமொழி. கேட்ட கேள்விக்குத் தக்க விடை சொன்னல் கேட்பவனுக்கும் திருப்தி உண்டாகும்; விடை சொன்னவனுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். இல்லாவிட்டால் 'செவிட்டுப் பிணம்' என்ற பட்டமோ, 'அட இழவேl பைத்தியத்தை அல்லவா கேள்வி கேட்கிருேம்?” என்ற மதிப்புரையோ விடை கூறினவனேப்பற்றி எழும்.

கேள்வி கேட்பவனும் அறிவுடையவனுக இருக்க வேண்டும்; பதில் சொல்கிறவனும் சரியாகச் சொல்ல வேண்டும். பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கின் விலேயைச் சொல்வது குற்றம். இந்தக் குற்றத்தை விடை வழு அல்லது செப்பு வழு என்று இலக்கணக்காரர்கள் சொல்வார்கள். செப்பு என்பதற்கு விடை என்பது பொருள். இலக்கணத் துக்கு உரை வகுத்த வியாக்கியானக்காரர்கள் பைத்தியக்காரத்தனமான ப தி ல் க ளு க் கு சில உதாரணம் காட்டியிருக்கிருர்கள்.

ஒரு வேளாளன் நிலத்தை உழுதுகொண்டிருக் கிருன். அங்த கிலம் ஒரு பெருவழியின் அருகில் இருக்கிறது. யாரோ பிரயாணி கடம்பூர் என்ற

வா. த. - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/26&oldid=645966" இலிருந்து மீள்விக்கப்பட்டது