பக்கம்:வாழும் தமிழ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வாழும் தமிழ்

ஊருக்குப் போய்க்கொண் டிருக்கிருன். தான் போகிற ஊருக்கு அதுதான் சரியான வழியா என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்கு அவன் உழவனைப் பார்த்து, 'ஐயா, கடம்பூருக்கு வழி எது?’ என்று கேட்கிருன். உழவன் இரண்டு மாடுகளே ஏரில் பூட்டி உழுகிருன். இடத்து மாடு, வலத்து மாடு என்று அந்த மாடுகளேச் சொல்வது வழக்கு. அந்தக் காலத்தில் இடம் பூணி, வலம் பூணி என்று சொல்வி வந்தார்கள். வலப் பக்கத்தில் பூட்டப்பட்டது, இடப்பக்கத்தில் பூட்டப்பட்டது என்பது அவற்றின் பொருள். 'இடத்திலே இருக்கிற மாடு எங்கள் வீட்டில் உள்ள பசுவின் கன்று’ என்று அந்த உழவன் சொல்கிருன். கடம்பூருக்கு வழி யாதோ? என்று கேட்ட வழிப்போக்கனுக்கு அங்கக் காலத்துப் பேச்சில், 'இடம் பூணி என் ஆவின் கன்று” என்று அந்த உழவன் சொல்கிருண். பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டவனிடம் கொட்டைப் பாக்கின் விலை சொன்ன புத்திசாலிக்கு இந்த உழவன் அண்ணகைத்தான் இருக்க வேண்டும். இந்த வினவுக்கும் வி ைட க் கு ம் பட்டுக்கோட்டை, கொட்டைப் பாக்கு, கடம்பூர், இடம்பூணி என்று எதுகையில்ை தொடர்பு இருக்கிறதேயொழியப் பொருளால் ஒரு தொடர்பும் இல்லை.

பைத்தியக்காரக் கேள்விக்கு, 'ஒரு விரல் காட்டி, கெடிதோ? குறிதோ? என்பது வினவழு” என்று உதாரணம் காட்டுகிமுர்கள் உரையாசிரியர்கள். இரண்டு இருந்தால்தானே நீண்டது, குட்டையானது என்று ஒப்பு கோக்கி உணர முடியும்?

தொல்காப்பியத்தில், வினு விடை என்னும் இரண்டிலும் குற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்’ என்று ஒரு சூத்திரம் சொல்லுகிறது. பிறகு “வினவுக்கு நேர்முகமான விடையாக இல்லாவிட்டாலும் மறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/27&oldid=645969" இலிருந்து மீள்விக்கப்பட்டது