பக்கம்:வாழும் தமிழ்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்விகள் 2 #,

நில்லாமல் அதற்குமேலும் சில செயல்கள் நடக்க வேண்டுமென்று விரும்பிக் கேள்வி கேட்கும். சக்தர்ப்பம் உண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் வரும் கேள்விகளே மூன்ருக வகுத்துக்கொண்டார்கள்.

தீபாவளிக்கு ஒரு பணக்காரர் வீட்டில் துணிமணி வாங்குகிருர்கள். கடை வியாபாரி, வேட்டி புடைவை முதலியவைகளேயெல்லாம் மூட்டையாக கட்டிச் சுமந்து கொண்டு வந்திருக்கிருன். கீழே: இறக்கி வைத்து மூட்டையை அவிழ்த்து எல்லா வற்றையும் பரப்புகிருன். செல்வர் தம்முடைய குடும்பத்துக்கு வேண்டிய ஆடைகளை வாங்குகிருர். அப்போது அவர் வீட்டுச் சமையற்கார ராமன் அங்கே வருகிருன். அவன் ஏழை. அவன் பணம் கொடுத்து இந்தக் கஷ்ட காலத்திலே எங்கே வேட்டி வாங்கப் போகிருன்? அவனேக் கண்டவுடன் இரக்கத்துடன் அந்தச் செல்வர், ராமா, நீ வேட்டி வாங்கிவிட்டாயோ?” என்று கேட்கிருர் ராமன், 'இல்லை’ என்று சொல்கிருன். செல்வர் தாம் கேட்ட கேள்விக்கு விடை வந்து விட்டதென்ற திருப்தியோடு: சும்மா இருந்துவிடுகிருரா? உடனே, "இங்தா, ராமனுக்கு ஒரு வேட்டி, சுமாரான விலையில் எடு” என்று சொல்லி ஒரு வேட்டியை வாங்கித் தருகிரு.ர். அதைக் கொடுத்த பிறகுதான் அவர் கேட்ட கேள்வியின் கருத்து முற்றுப்பெறுகிறது. கேட்ட செல்வரின் மனம் அமைதி அடைகிறது. ஆகவே, அவர் கேட்ட கேள்வி, அறியா வின என்று சொல்லக், கூடாது. அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று கினைத்துக் கேட்ட கேள்வி அது. அதைக் கொடை வி ைஎன்று சொல்லுவார்கள்.

நம் நண்பன் நம்மிடம் வந்து, ‘‘கையில் ஏதாவது பணம் இருக்குமா, அப்பா?’ என்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/30&oldid=645976" இலிருந்து மீள்விக்கப்பட்டது