பக்கம்:வாழும் தமிழ்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வாழும் தமிழ்

கேட்கிருன், அதற்கு நாம், இருக்கிறது” என்று சொல்லுகிருேம். அவன் கேள்வி கேட்டது இந்த விடையைத் தெரிந்துகொள்வதோடு கிற்பதற்கு அல்ல். நம்மிடமிருந்து பணம் கடகை வாங்கிக் கொள்வ தற்காகவே அந்தக் கேள்வியைக் கேட்கிருன். நம்மிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்ப்தை அறிவதற்காக மாத்திரம் அவன் கேட்கவில்லை. நம்மிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகே அவன் கேட்ட கேள்வியின் கருத்து நிறைவேறுகிறது. முன்னே செல்வர் கேட்ட கேள்வி கொடுப்பதற்காக; கொடுக்கிறவர் கேள்வி அது. இங்கே நண்பன் கேட்ட கேள்வி கொள்வதற்காக, இதைக் கொளல்வின என்பார்கள்.

வேலேக்காரனேப் பார்த்து முதலாளி, ‘ஏண்டா, தோட்டத்துக்குத் தண்ணிர் இறைத்தாயோ?” என்று கேட்கிருர், அவன் இறைக்கவில்லை. 'இல்லை” என்று சொல்வதையா அவர் எதிர்பார்க்கிருர்? இறைக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிரு.ர். அவனே மறைமுகமாக ஏவுவதற்காக இப்படிக் கேட்கிருர். இதை ஏ வ ல் வி னு என்பார்கள். .பள்ளிக்கூடம் போகாத பையனே, ‘ஏண்டா, பள்ளிக்கூடம் போகவில்லேயா?’ என்று அதட்டிக் கேட்கும் தகப்பருைடைய கேள்விக்குப் பையன் எப்படி விடை அளிக்கிருன்? வார்த்தைகளால் அல்ல; புத்தகங்களையும் சிலேட்டையும் எடுத்துக் கொண்டு முனகியபடியே பள்ளிக்கூடம் போகப் புறப்படுகிருன். அதுதான் அவன் விடை தந்தை, 'பள்ளிக்கூடம் போடா” என்று உத்தரவிட்ட தாகத்தான் அவன் கினைக்கிருன்.

இவ்வாறு கேள்விகளேத் தனித்தனியே எடுத்துக் கொண்டு வகுத்தால் பல வகையாகப் பிரியும். எல்லாவற்றுக்கும் ஒரே கேள்விக் குறியைத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/31&oldid=645978" இலிருந்து மீள்விக்கப்பட்டது