பக்கம்:வாழும் தமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைகள் 25.

வழக்காகிய பேச்சு மொழியைக் கவனித்திருக் கிருர்கள். கேள்வியும் விட்ையும் இலக்கியங்களைக் காட்டிலும் பேச்சிலேதான் அதிகமாகப் பயில் கின்றன. ஆகவே, அவற்றைப்பற்றிய இலக்கணம் வரும்போதெல்லாம் உரையாசிரியர்கள் தினசரி வாழ்விலே நாம் பேசுகிற பேச்சிலிருந்து உதாரணம் எடுத்துக் காட்டுகிரு.ர்கள்.

கேள்விகளே ஆறு வகையாக இலக்கணக்காரர். பிரித்தது, இந்திப் பேச்சின் ஆராய்ச்சியைக் கொண்டுதான். அப்படியே விடைகளையும் ஆராய்ந்து இலக்கணக்காரர் வகுத்திருக்கிருர்.

'வின விடைகள் எப்படி அமைய வேண்டுமோ அப்படி இருக்க வேண்டுமே ஒழிய, மனம் போன படி இருக்கக்கூடாது. மேற்பார்வையில் விைைவப் போலவும் விடையைப் போலவும் இல்லாவிடினும் கருத்தினல் வினவாகவும் விடையாகவும் இருக்கும், என்ற செய்தியைச் சொல்லதிகாரத்தின் முதல் பிரிவில் தொல்காப்பியர் சொல்கிரு.ர்.

விடையைச் செப்பு என்று கூறுவர் புலவர். ஒரு கேள்வியைக் கேட்கும்போது, உண்டு, இல்லே யென்று கோர்ட்டில் வாக்கு மூலம் கொடுப்பது. போலச் சொல்வது நேர்முகமான விடை. அதைச் செவ்வன் இறை என்பர். இறை என்பது விடைக்கு ஒரு பெயர். செவ்வன் என்பது நேர் என்பதைக் குறிக்கும் சொல். நேரான விடை என்பதே செவ்வன் இறை என்பதற்கு அர்த்தம்.

நேரான விடை இன்றிக் கோணலான விடை ஒன்று உண்டா? ஆம், உண்டு. கேள்வியை ஒருவன் கேட்டால் அதற்கு விடையாக மற்ருெரு கேள்வியைக் கேட்பவர் உண்டு. அண்ணு, இதை வாங்கித் தரமாட்டாயா?’ என்று தம்பி கேட்டால், “வாங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/34&oldid=645985" இலிருந்து மீள்விக்கப்பட்டது