பக்கம்:வாழும் தமிழ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வாழும் தமிழ்

தந்ததில்லையா?’ என்று அண்ணு திருப்பிக் கேட்கிருன். அங்தக் கேள்வி, உருவத்தில் கேள்வியே ஆலுைம் அர்த்தத்தில் மு ன் ை.ே ல கேட்ட கேள்விக்குப் பதிலாக இருக்கிறது; முன்பு வாங்கித் தந்ததுபோல இப்போதும் வாங்கித் தருவேன்’ என்ற பொருளே உடையது. ஆகவே, அந்த இரண்டாவது கேள்வியும் விடைதான். 'இதென்ன. இந்த வாக்கியத்தில் கேள்விக் குறி போட்டு எழுதி யிருக்கிருன்? இதை எப்படி விடை என்று சொல்ல முடியும்?' என்று யாருக்காவது சந்தேகம் வங்தால் என்ன செய்வது? அதற்காகத் தொல்காப்பியர்,

வினவும் செப்பே விஎைதிர் வரினே

என்று சூத்திரம் செய்திருக்கிருர். 'ஒரு கேள்விக்கு எதிரே விடை தரும் கருத்தோடு வந்தால் அது வினவாக இருந்தாலும் விடைதான்” என்பது இதன்

பொருள்.

இப்படி நேர்முகமாகவும் மறைமுகமாகவும் வரும் விடைகளுக்கு உரையாசிரியர்கள் உதாரணம் கூறி வகைப்படுத்தி யி ரு க் கி ரு ர் க ள். பிற்காலத்தில் இலக்கணம் செய்த நன்னூல் ஆசிரியர் எல்லா வற்றையும் கவனித்து ஒருவாறு வகைப்படுத்தி விடை எட்டு வகைப்படும் என்று சொல்கிரு.ர். அவற்றில் நேர்முகமான விடை மூன்று; மறைமுக மானவை ஐந்து.

'கோவிலுக்குப் போகிற வழி எது?” என்று ஊருக்குப் புதிதாக வந்தவர் கேட்கிருர். அவர் கேள்விக்குப் பதில் வெறும் வார்த்தையாக மாத்திரம் வரவில்லை. 'இதோ பாருங்கள்; இப்படியே போங்கள்' என்று ஒருவர் பதில் சொல்கிரு.ர். இது நேரான விடைதான். ஆலுைம் வாய் விடை கறும்போதே கை ஒன்றைச் சுட்டுகிறது. இப்படிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/35&oldid=645987" இலிருந்து மீள்விக்கப்பட்டது