பக்கம்:வாழும் தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைகள் 27

சுட்டிச் சொல்வதல்ை இந்த விடைக்குச் சுட்டு என்று பெயர் கொடுத்திருக்கிருர்கள்.

"இங்கே சாப்பிடுகிறீர்களா?' என்று உறவின ரைக் கேட்கிருேம். அவர், 'ஆகட்டும்” என்று உடம்பட்டுச் சொல்கிருர், அது நேர் விடை என்று

சொல்லப்படும்.

'சாப்பிடவில்லை’ என்று சொல்லிக் காரணத்தை விவரிக்கிருர். இது உடம்படாததைக் குறிக்கும். விடை: அதாவது மறுத்துச் சொல்லும் விடை இதை மறை என்று சொல்வார்கள்.

சுட்டு, நேர், மறை என்ற மூன்றும் செவ்வன் இறையின் வகைகள்.

குறிப்பினல் விடையைப் புலப்படுத்தும் மறை முகமான விடைகளைக் கவனிப்போம்.

அண்ணன் தம்பியைப் பார்த்து, காலையில் கடைக்குப் போய்ச் சாமான் வாங்கி வருகிருயா?” என்று கேட்கிருன். தம்பிக்கோ விருப்பம் இல்லை. அதை நேர்முகமாகத் தெரிவிப்பதாக இருந்தால், 'மாட்டேன்’ என்று ஒரு வார்த்தையில் சொல்வி விடலாம். அப்போது அது மறைவிடை என்ற வகையில் அடங்கும்; அவன் மறுக்கிருன் அல்லவா?

தெளிவாக அப்படிச் சொல்லாமல் அவன் வேறு விதமாகத் தன் கருத்தைத் தெரிவிக்கிருன். 'தோன் போய்விட்டு வாயேன்!” என்று சொல்கிருன். இந்தப் பதிவில், 'நான் போகமாட்டேன்’ என்ற விடை மறைந்திருக்கிறது. ஆனாலும் விடையின் உருவம், ‘'நீ இதைச் செய்’ என்று ஏவுவதுபோல் இருக்கிறது ஆகையால் இந்த மாதிரி விடைகளுக்கு ஏவல் விடை என்று பெயர் அமைத்திருக்கிருர்கள்.

'ஐந்நூறு ரூபாய் பணம் கொடுப்பாயா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/36&oldid=645989" இலிருந்து மீள்விக்கப்பட்டது