பக்கம்:வாழும் தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைகள் 29

"ஜவுளிக் கடைக்கு மாதம் இருநூறு ரூபாய் தயாராக வைத்திருக்க வேண்டுமே!’

டாம்பிகமான குணமுடையவள் ஆகையால் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன் என்பதை அவன் சொல்லாமல் சொல்கிருன்.

'இன்னும் இரண்டு நாள் இருந்து போகக் கூடாதா?’

'சரியாய்ப் போச்சு வேலைக்காரர்களெல்லாம் வேலே செய்யாமல் ஏமாற்றிவிடுவார்கள்.”

இருக்க முடியாது என்பதுதான் இதன் கருத்து. இந்த வகை விடைகளுக்கு உறுவது கூறல் என்று பெயர். இனி நடக்கப் போகும் ஒன்றைச் சொல்லும் முகத்தால், தன் கருத்தைப் புலப் படுத்துவதனால் இந்தப் பெயரை வைத்திருக்கிருர்கள்.

'அவசரமாக வேண்டியிருக்கிறது; ஐந்நூறு ரூபாய் தருவாயா?

'யாரிடமாவது வாங்கிக் கொள் ; நான் பிணை கொடுக்கிறேன்'

இந்த விடை கேட்ட கேள்விக்கு நேரான விடை அல்ல; உண்டு, இல்லே என்ற இரண்டிலும் படாமல் இருக்கிறது. கேட்கிறவனுக்குப் பணம் வேண்டும். அதை இவன் கொடுக்கமுடியாது என்று புலப் படுத்தினாலும் அவன் பணம் அடைய வழி சொல்கிருன். இந்தப் பதிலினல் கேள்வி கேட்டவன் திருப்தியை அடைகிருன். ஆனல் அது அவன் எதிர் பார்த்த முறையில் ஏற்பட்ட திருப்தி அன்று; அதற்கு இனமானது,

'வைரத் தோடு வாங்க வேண்டும்; பணம் கடகைத் தருகிருயா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/38&oldid=645994" இலிருந்து மீள்விக்கப்பட்டது