பக்கம்:வாழும் தமிழ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்ட கேள்விக்கு கேர்முகமான விடை வருவதாக இருந்தால், “தருகிறேன்” என்று வரும்:

அல்லது, "மாட்டேன்’ என்று வரும்.

நண்பர், 'என்னிடம் ஒரு வைரத்தோடு நல்லதாக இருக்கிறது; தருகிறேன்’ என்கிருர், கேட்ட கேள்விக்கு அவர் எதிர்பார்த்த விடை அல்ல இது. ஆலுைம் அவருடைய கருத்து ஒரு வகையில் நிறைவேறுவதற்கு ஏற்ற விடைதான்.

இந்த மாதிரி வருவனவற்றை இனமொழி என்பர்.

கேட்ட கேள்விக்குப் பள்ளிக்கூடப் பிள்ளையைப் போலவும், சாட்சிக்காரனேப் போலவும் விடை சொல்வதில் ரசம் இல்லே. சட்டப்படி அவைகளே சொல்லாலும் பொருளாலும் விடைகள் என்பதற்கு உரியவை. ஆல்ை அவற்றிற்குப் புறம்பே வாழ்க்கையில் இன்பப் பகுதிகள் பல இருக்கின்றன. காதலன் காதலரிடையே நிகழும் வி ைவிடைகளும், புலவர்களிடையே நிகழும் கேள்வி பதில்களும், நண்பர்களிடையே நடைபெறும் உரையாடல்களும் வெறும் சொல்லளவிலே நிற்பன அல்ல; பெயருக்கு நாக்குப் பேசுகிறது; அதனூடே உண்மையில் இருதயந்தான் பேசுகிறது. நாக்கினலே பேசும் பேச்சுத்தான் சொல். ஆனால் இருதயம் பேசும் மொழி குறிப்பு. அதை உணர்வது காது அல்ல; அறிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/39&oldid=645996" இலிருந்து மீள்விக்கப்பட்டது