பக்கம்:வாழும் தமிழ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சொல்லிலும் லாபம்

'செட்டியாரே, உப்பு இருக்கிறதா?’ என்று கேட்டால், "பருப்பு இருக்கிறது” என்று அவர் சொல்வதை நாம் எத்தனையோ தடவை எடுத்துச் சொல்லிப் பரிகாசம் செய்கிருேம். அந்தப் பரிகாசம் நியாயமானதென்று நாம் நினைக்கிருேம். நாம் ஒன்று கேட்க, செட்டியார் வேறு ஒன்று சொல்கிருரே, இது நேரான பதில் அல்ல’ என்று அப் பரிகாசத்துக்குக் காரணமும் சொல்ல வருகிருேம். இலக்கணத்துக்கு உரிய பாஷையின்படி, செட்டியா ருடைய விடை தவருக இருப்பதால், விடைவழு என்று சொல்லலாம் என்றுகூடத் தோன்றுகிறது.

ஆனல் இலக்கணம் என்ன சொல்கிறது? செட்டியார் அப்படிச் சொல்வதுதான் சரி என்று சொல்கிறது.

நியாய மன்றத்தில் சாட்சியை விசாரிக்கும் போது வக்கீல் கேள்வி கேட்கிருர். அந்தக் கேள்வி களுக்கு நேர்முகமான விடைகளையே அவர் எதிர் 'பார்க்கிருர். உண்டு, இல்லை என்பன போன்ற விடைகளேச் சொன்னல் போதும். அதற்கு மேல் சாட்சிக்காரன் ஏதாவது சொல்லத் தொடங்கினல், 'கேட்டதற்கு மாத்திரம் பதில் சொல்' என்று. வக்கீல் மிரட்டுகிருர். இந்த வி ைவிடை, விவகாரத் திலும் சண்டையிலும் வழக்கிலுமே பயன்படும்; உலக வாழ்க்கையில் அமைதியாக வாழும் மக்க ளிடத்தில் ப யன் படா து. கேட்பவனுடைய கேள்வியில் உள்ள சொற்களேக் காட்டிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/40&oldid=645999" இலிருந்து மீள்விக்கப்பட்டது