பக்கம்:வாழும் தமிழ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சில் அழகு 39

தொனிக்கிறது. நிகழ்ச்சி அமங்கலமாக இருந்தாலும் கூடிய வரையில் அந்த அமங்கலத்தைக் குறைக்கப் பேச்சிலாவது முயல வேண்டும் என்று தமிழர் கருதினர். அமங்கலம் மக்கள் விரும்பாதது. ஆலுைம் நிகழ்ந்துவிடுகிறது. அதை நடவாமல் தடுக்க கம்மால் ஆகாது. ஆகவே, நம் எல்லேக்குள் அடங்கிய பேச்சில் அந்த அமங்கலத்தின் ஆற்றலே ஒரளவு குறைத்துக்கொள்ளலாம் என்பது அவர்கள் எண்ணம் போலும்!

  • _: y t:};

'தலேயைச் சிறைத்துக் கொள் என்று o - § { * - *.5 y .?.. *سر سب -,م ؟Tசொல்வதைக் காட்டிலும், 'தலே பண்ணிக்கொள் என்று சொல்வதை மரியாதையாகக் கருதுகிருேம்.

இவ்வாறு அமங்கலச் செய்தியை அமங்கலச் சொற்களால் சொல்லாமல் மங்கலம் போலத் தோன்றும்படி சொல்வதை மங்கல வழக்கு என்று இலக்கண ஆசிரியர் குறிப்பர். தகுதி என்னும் மரியாதைப் பேச்சில் இது ஒரு வகை.

சபைக்கு முன்னே பேசவே தகாத சில வார்த்தைகள் உண்டு. அசப்யம் என்று வடமொழி யிலே சொல்வார்கள்; அவையல் கிளவி என்று தமிழில் கூறுவர். அவற்றை மறைத்தே சொல்ல வேண்டும்.

'அவையல் கிளவி மறைத்தினர் கிளத்தல்” என்று தொல்காப்பியர் சூத்திரம் செய்திருக்கிரு.ர். சபையிலே பேசுவதற்கு உரியன அல்லாதவற்றை மறைத்து உசிதமான வார்த்தைகளால் சொல்ல வேண்டுமென்பது அதன் பொருள். அவையல் கிளவியை இடக்கர்ச் சொல் என்றும் கூறுவது உண்டு. சொல்லத் தகாததை இடக்கர் என்று குறிப்பர். அதை மறைத்துச் சொல்லும் மரியாதை வார்த்தைக்கு இடக்கர் அடக்கல் என்று பெயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/48&oldid=646016" இலிருந்து மீள்விக்கப்பட்டது