பக்கம்:வாழும் தமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வாழும் தமிழ்

வைத்திருக்கிருர்கள். இடக்கரை அடக்கிப் பேசும் பேச்சு என்பது அதன் பொருள்.

குழங்தை நடுக்கூடத்தில் வெளிக்குப் போகிறது. அந்தச் சமயத்தில் யாரோ வங்துவிடுகிருர். தாய் உடனே எதையாவது போட்டு அதை மறைத்து விடுகிருள். அவர் கண்ணில் படக்கூடாதென்று கருதியே அப்படிச் செய்கிருள். அதுபோலவே அந்தக் குழங்தை செய்த காரியத்தையும் காதிலே படாதவாறு மறைத்துச் சொல்வது வழக்கம். இல்லாவிட்டால் அந்தப் பேச்சு அருவருப்பை உண்டாக்கும். குழந்தைக்குக் கால் கழுவிவிடு' என்று சொல்வது இடக்கரை அடக்கித் தக்கபடி சொல்லும் பேச்சு.

வண்டியில் பிரயாணம் செய்யும் பாட்டி தன் அருகே உள்ள பெண்மணியின் குழங்தை அழுவதைக் காண்கிருள். குழந்தையை எடுத்துவிடு' என்று சொல்கிருள். அந்தப் பேச்சு எவ்வளவு உசிதமாக இடக்கரை அடக்கிப் பேசும் பேச்சாக இருக்கிறது!

இந்த இரண்டு வகையான பேச்சுக்களையும் சபைக்கு நடுவே பேசும்போது கருத்தை யாவரும் உணர்ந்துகொள்வார்கள். ஆனல், சில அவசியமான காரணங்களே உத்தேசித்துப் பலர் கூடும் ஓர் இடத்தில் ஒரு சிறு கூட்டத்தினர் தங்களுக்குள் குறிப்பாகப் பேசிக்கொள்வது உண்டு. வியாபார ரகசியம், அரசியல் ரகசியம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு இத்தகைய குறிப்பை மக்கள் மேற்கொள்வார்கள். அதைப் பேசும்போது அங்த இனத்தைச் சேர்ந்த குழுவினருக்கே அது புலப்படும். ஆகையில்ை அதைக் குழுவின் வந்த குறிநிலை வழக்கு என்று கூறுவர். பின்னும் சுருக்கிக் குழுஉக்குறி என்றும் சொல்வதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/49&oldid=646018" இலிருந்து மீள்விக்கப்பட்டது