பக்கம்:வாழும் தமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சில் அழகு 4镇

எனக்குப்பழக்கமான கண்பர் ஒருவர் இருக்கிருர், அவர் தம் கண்பர்களோடும் உறவினரோடும் பேசும் போது அடிக்கடி, பஞ்சாட்சரம்' என்று சொல்வது வழக்கம். அவர் ஒரு பஞ்சாட்சரம் என்று சிலரைப் பற்றிக் குறிப்பிடுவார். அதன் பொருள் எனக்கு விளங்கவில்லே. அவரோடு பழகினவர்களுக்கு அந்தச் சொல் நன்ருக விளங்கியது. அதை அவர் சொல்லும் போதே கேட்பவர்கள் நகைத்தார்கள். பஞ்சாட்சரம் என்ற சொல் நகைப்புக்கு இடம் தருவதல்லவே! அதில் ஏதோ நுட்பம் இருக்கிறது என்று கருதி ஒரு நாள் அவரை விசாரித்தேன். அவர் அதன் பொருளைத் தெளிய வைத்தார். பஞ்சாட்சரம் என்பதற்கு ஐந்தெழுத்து என்று அர்த்தம் அல்லவா? பைத்தியம்’ என்ற வார்த்தையில் " ஐந்தெழுத்துக்கள் இருக் கின்றன. அந்தச் .ெ ச | ல் லே த் தா ன் அவர் "பஞ்சாட்சரம் என்று குறிப்பிட்டு வந்தார். இது சிறிய குழுவிலே அடிபடும் ஒரு சொல். இதுபோல ஒரு தொழில் செய்வாரிடையோ ஒரு சாதியின ரிடையோ அடிப்பட்ட வழக்காக வந்துவிட்டால் அதுவே குழுஉக்குறியாகிவிடும். -

பொற் கொல்லர் பொன்னேப் பறியென்று சொல்வார்களாம். யானேப் பாகர் ஆடையைக் காரை என் பார்களாம். வேடர் கள்ளைச் சொல்விளம்பி என்று குறிப்பாகச் சொல்வார்களாம். உரை யாசிரியர்கள் குழுஉக்குறிக்கு இவற்றை உதாரண மாகக் காட்டியிருக்கிருர்கள்.

சொல்லிலே உள்ள விசித்திரங்கள் அந்தச் சொல்லுக்கு உள்ள பொருளைக்கொண்டு மாத்திரம் ஆராய்ந்தால் புலப்படா. வாழ்க்கையில் அது எவ்வெப்போது, யார் யாரால் வழங்கப்படுகிறது என்று ஆராய்ச்சி செய்து, அதன் பின்பே ஆங்தச் சொல்லுக்குப் பொருள் கண்டுபிடிக்க வேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/50&oldid=646020" இலிருந்து மீள்விக்கப்பட்டது