பக்கம்:வாழும் தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

si.2 - வாழும் தமிழ்

'கால் கழுவிவங்தார் என்ற வாக்கியத்தில் உள்ள வார்த்தைக்கு மாத்திரம் பொருள் பார்ப்பதானுல் காம் தமிழுலக வாழ்க்கையை உணர்ந்தவர்களாக மாட்டோம். .

மேலே சொன்ன தகுதி வழக்குகளுக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அப்படியின்றி, இயற்கை யாகச் சொல்ல வேண்டிய முறையினின்றும் யாதொரு காரணமும் இன்றி வேறுபட்டு வரும் பேச்சு வகை உண்டு. பேச்சு வழக்கிலே அவை அப்படி வங் து விட்டன. அவற்றை வழக்கு என்று வகுத்திருக் கின்றனர். வெள்ளாடு என்று ஒருவகை ஆட்டைச் சொல்கிருேம். தமிழ் நாட்டில் வா ழ் ங் து வெள்ளாட்டைப் பார்க்காத அயல் நாட்டார் ஒருவர் புதிதாகத் தமிழ் படிக்கிருர். அவர் வெள்ளாடு என்ற சொல்லேக் கண்டவுடன், வெள்ளே நிறமுடைய ஆடு என்றுதான் அர்த்தம் செய்துகொள்வார். இங்கே வாழ்ந்து பேச்சு வழக்கை அறிந்தவருக்குக் கறுப்பு ஆடானுலும் அது வெள்ளாடுதான் என்று தெரியும். அப்படிச் சொல்லக் காரணம் என்ன? தெரியாது. நெடுங்காலமாக அப்படித்தான் வழங்கு கிறர்கள் என்பதுவே காரணம். இதனை வழக்கு என்று கூறுவர். பாத்திரத்தில் இருக்கும் சிறிதளவு நீரை, சில நீர் என்று முற்காலத்தில் சொன்னர்களாம். அகல்ை உரையாசிரியர்கள் அதனை வழக்குக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிருர்கள். குடத்துள்ளும் பிற கலத்துள்ளும் இருந்த நீரைச் சிறிது என்னது சில என்றலும், அடுப்பின் கீழ்ப்புடையை மீயடுப்பு என்ற லும் போல்வன வழக்காம் என்று நச்சினர்க்கினியர்

எழுதுகிரு.ர்.

காரணம் பற்றிய தகுதியிலும், காரணம் இல்லாமல் வரும் வழக்கிலும் பிற இடங்களில் வரும் சொற்களே வருகின்றன. ஆலுைம் அவற்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/51&oldid=646023" இலிருந்து மீள்விக்கப்பட்டது