பக்கம்:வாழும் தமிழ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேச்சில் அழகு 43

பொருளேக் கண்டு பிடிக்க, சபை மரியாதையையும் உலக வழக்கையும் ப்ற்றிய அறிவு இருந்தாலன்றி இயலாது, சொல்லுக்குச் சொல் வைத்து இதற்கு இது பொருள் என்று காண வேண்டிய மொழியில் இது ஒரு விந்தை. சொல்லுக்குப் புறம்பே அமைந்த பொருளே உடையனவாகையால் இவை தவறு என்று தள்ளக் கூடாது. தள்ளினல் வாழ்க்கையைப் புறக்கணித்தவர்கள் ஆ .ே வ ம் . 'இவற்றைத் தள்ளாமல் கொள்ள வேண்டும் என்று தொல் காப்பியர் சொல்கிரு.ர்.

தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைகிலே இலவே.

'தகுதியையும் உலக வழக்கையும் தழுவிப் பேசப் படும் பகுதியிலே வரும் சொற்கள் நீக்கப்படுவன அல்ல. அவற்றைக் கொள்ளவேண்டும் என்பது இதன் பொருள்.

இது வெறும் சொல்லுக்கு இலக்கணமா? அன்று. அதனூடே தோன்றும் தமிழர் வாழ்க்கைக்கும் இலக்கணம். அவர்கள் உசிதமாகப் பேசத் தெரிங் தவர்கள். அப்படிப் பேசும் பேச்சில் அவர்கள் கருத்தைப் புலப்படுத்தும் சொல் தனக்குரிய இயல்பான பொருளேப் புலப்படுத்தாமல் இருப்பினும், இலக்கணக்காரரால் போற்றற்கு உரியது என்ற செய்திகளை யல்லவா இந்தச் சூத்திரத்தினுல் அறிகிருேம்? - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/52&oldid=646025" இலிருந்து மீள்விக்கப்பட்டது