பக்கம்:வாழும் தமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளிவான பேச்சு - 45

பெரும்பகுதியை வெளிப்படுத்த ஒரு மொழி உதவு மால்ை அந்த மொழியை உயர்வானதென்றே சொல்ல வேண்டும்.

கருத்தை வெளிப்படுத்துவதில் ஒரு மொழி சிறந்து நிற்பதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் இரண்டை முக்கியமாக எடுத்துச் சொல்லலாம். பல மக்களால் பேசப்படுவது, பல காலம் வழக்கில் இருப்பது என்பவை அவை. இந்த இரண்டு ஒரு மொழியின் சொல் வளப்பத்துக்குக் காரணம்.

கருத்தைத் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்ருல், பேசும்போது இதுவோ அதுவோ என்று மயங்கும்படியாகப் பேசலாகாது. ஆகவே, மயக்கம் இல்லாமல் பேச்சு வழக்கு அமைவது மிகவும் முக்கியம். குறிப்பாகப் பேசுவது மயக்கமாகாதோ என்று கேட்கலாம். குறிப்பிலும் தெளிவான குறிப்பு உண்டு. மங்கலமும், இடக்கர் அடக்கலும் குறிப்புப் பேச்சே ஆலுைம் சொல்பவனுடைய கருத்தைக் கேட்பவன் தெளிவாக உணர்ந்து கொள்கிருன்.

தமிழர் தெளிவாகப் பேசத் தெரிந்தவர்கள். அவர்கள் மொழியில் சொல்லுக்குப் பஞ்சம் இல்லை. 'இப்போது எத்தனையோ வார்த்தைகளுக்குத் தமிழ் தெரியாமல் இடர்ப்படுகிருேமே!’ என்று சில நண்பர்கள் கேட்கலாம். இந்த நாட்டிலே தோற்றிய பொருள்களுக்கும், இந்த காட்டிலே எண்ணும் எண்ணத்துக்கும் சொல் இல்லை யென்ருல் அதுதான் குறைபாடே ஒழிய, இறக்குமதியான சரக்குக்குப் பேர் இல்லையே யென்ருல் பொருள் இறக்குமதியாகும் போது பெயரும் இறக்குமதியாக வேண்டியது தான். அந்தப் பெயர் இங்கே வந்து உரு மாறியோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/54&oldid=646029" இலிருந்து மீள்விக்கப்பட்டது