பக்கம்:வாழும் தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.6 வாழும் தமிழ்

சொல்லே மாறியோ வழங்குவதும் உண்டு. தமிழ் நாட்டு இட்டிலிக்கு இங்கிலீஷில் வார்த்தை இல்லை. யென்ருல், அது இங்கிலீஷின் குறை அல்ல. அவர்கள் ஊரில் இட்டி வியாகிய பொருள் இல்லே. அதனல் அதற்குரிய சொல்லும் இல்லை.

உலக வழக்காகிய பேச்சிலே மயக்கமில்லாமல் இருக்க வேண்டும். ஆல்ை அது இருக்கத்தான் இருக்கிறது. ஏன் அப்படி? அதற்குரிய காரணங்களே இலக்கணக்காரர் ஆராய்ச்சி செய்திருக்கிரு.ர்.

உளுத்தம்பருப்பு வாங்கி வா என்று சொல்விக் கடைக்குப் பையனே அனுப்புகிருேம். வேறு பருப்பு களும் இருப்பதளுல் உளுத்தம்பருப்பு என்று சொல்லித் தெளிவாக்குகிருேம். சம்பா கெல் நாலு: கலம் வந்தது' என்னும்போது சம்பா கெல் அல்லாத வேறுவகை இருப்பதால், சம்பா என்ற சொல் தெளிவுக்குக் காரணமாகிறது. செந்தாமரையில் திருமகள் எழுந்தருளி யிருக்கிருள் என்பதில் தாமரை என்று சொல்வதைக்காட்டிலும் செங்தாமரை என்று சொல்வது கருத்தைத் தெளிவாக்குகிறது. வெண் டாமரை ஒன்று இருப்பதால் அப்படி வேறு பிரித்துச் சொல்லவேண்டி யிருக்கிறது. செம்மை, வெண்மை என்று சேர்த்துச் சொல்லும் சொற்களே அடை என்று என்று சொல்வார்கள், விசேஷணம் என்பது வட மொழி வழக்கு. -

'சிவப்புச் சூரியன் உதித்துவிட்டான்' என்று யாராவது பேசக் கேட்கிருேமா? சிவப்புச் சூரியன் என்று சொன்னலும் சொல்லாவிட்டாலும் அவன் சிவப்புத்தான். சூரியன் உதித்துவிட்டான்' என்று சொன்னலே போதும். வெள்ளைச் சூரியன் ஒன்று இருந்தால் சிவப்புச் சூரியன் என்று இனம் பிரித்துச் சொல்ல வேண்டும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/55&oldid=646032" இலிருந்து மீள்விக்கப்பட்டது