பக்கம்:வாழும் தமிழ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளிவான பேச்சு 47'

நம் வீட்டு வேலேக்காரர்களில் இரண்டு பேருக்கு ராமன் என்ற பெயர் இருக்கிறது. அந்த இரண்டு பேரையும் வேறு பிரிக்க, கெட்டை ராமன்', 'குட்டை ராமன்’ என்று அடைகொடுத்துப் பேசுவதுதான் தெளிவாக இருக்கும். அப்படி இல்லாமல் ஒரே ராமன் இருக்கையில், நெட்டை ராமனே கூப்பிடு’ என்ருல் புதிதாக யாராவது அதைக் கேட்கும்போது

வர் கெஞ்சில் குழப்பம் உண்டாகிவிடும். குட்டை

ராமன் வேறு இருக்கிருன் போலும்' என்று அவர் எண்ணுவார். ஆகவே, "ராமனேக் கூப்பிடு என்று சொன்னலே போதும்.

உலக வழக்காகிய பேச்சில் தெளிவுக்காக இந்த வழக்கம் இருக்கிறது. ஆனால் செய்யுளில் அழகுக்காக இதற்கு நேர் மாருக வரலாம். செங்கதிரவன், தண் மதியம், அலைகடல் என்றெல்லாம் செய்யுளில் வரும் போது உலக வழக்கை நினேங்து வெண்கதிரவன், வெய்ய மதியம், அலேயாத கடல் ஆகியவை உண்டு என்று நிச்சயித்துக் கொள்ளக் கூடாது.

அடை, உலக வழக்கில் வரும்போது இனம் பிரித்துக் காட்டும்; செய்யுளில் அப்படி வரவேண்டு. மென்கிற அவசியம் இல்லே. அடையாக வரும் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சுட்டித் தெளிவை உண்டாக்க உபயோகப்படுமானல் அதற்கு இனச் சுட்டுள்ள பண்பு என்று பெயர். அதனே உடையத இனச் சுட்டுள்ள பண்பு கொள் பெயர்.” செந்தாமரை என்பதில் செம்மை இனத்தைச் சுட்டும் பண்பு: செங்தாமரை என்பது அப்பண்போடு கூடிய பெயர். - .

செஞ் ஞாயிறு என்பதோ இனச் சுட்டு இல்லாத அடையை உடையது; வெண் ஞாயிறு ஒன்று இல்லே அல்லவா? இது இனச் சுட்டில்லாப் பண்புகொள் பெயர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/56&oldid=646034" இலிருந்து மீள்விக்கப்பட்டது