பக்கம்:வாழும் தமிழ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.48 வாழும் தமிழ்

'ஆழிசூழ் உலக மெல்லாம் பரதனே ஆள” என்று கம்பர் பாடுகிருர். பேசும்போது, ஆழிசூழ் உலகத்தில் மனிதன் நடமாடுகிருன்’ என்பது அநாவசியம். ஆழி குழாத உலகம் இருந்தாலன்றி அப்படிச் சொல்வது சில சமயங்களில் மயக்கத்தைக் க... உண்டுபண்ணும். கம்பர் பாடலாமா? என்ருல் அது கவிதைக்குரிய உரிமை, அலங்காரம்பற்றி அப்படிச் சொல்லக் கவிஞருக்கு அதிகாரம் உண்டு.

உசிதமான பேச்சைப்பற்றிச் சொன்ன பிறகு தெளிவான பேச்சைப்பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் தொல்காப்பியர் இந்தச் செய்தியை ஒரு குத்தி ரத்திலே சொல்லியிருக்கிருர்,

இனச்சுட்டு இல்லாப் பண்புகொள்

பெயர்க்கொடை வழக்காறு அல்ல செய்யுள் ஆறே. 'இனத்தைச் சுட்டுதல் இல்லாத பண்பைக் கொண்ட பெயர்களைத் தருதல் பேச்சு வழக்குக்கு உரிய சம்பிரதாயம் அன்று; கவிதைக்கு உரிய நெறி அது என்பது இகன் பொருள்.

செய்யுளில் இது வருவது அழகு என்பதைச் சேனவரையர் பின்வருமாறு சொல்லியிருக்கிருர்:

'பல பொருட்குப் பொதுவாகிய சொல்லன்றே ஒரு பொருட்குச் சிறந்த பண்பான் விசேடிக்கப் படுவது? ஞாயிறு, திங்கள் என்பன பொதுச்சொல் அன்மையின் செஞ்ஞாயிறென்றும், வெண் திங்க ளென்றும் விசேடிக்கப் படாவாயினும், செய்யுட்கண் அணியாய் கிற்றலின் அமைக்க’ என்ருர். -

'அநாவசியமாக வார்த்தைகளைச் செலவழிக்காதே. பேசுகிற பேச்சிலே தெளிவு வேண்டும். அதற்கு வேண்டுமானல் வார்த்தைகளைச் சேர்த்துச் சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/57&oldid=646036" இலிருந்து மீள்விக்கப்பட்டது