பக்கம்:வாழும் தமிழ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 வாழும் தமிழ்

தன்மை உடையது என்று சொல்ல வேண்டும் என்பது தொல்காப்பியர் கண்டு அமைத்த இலக்கணம். “கிலம் வலிதாயிற்று” என்று சொல்லும் சந்தர்ப்பம் உண்டு. அங்கே உண்மையில் செயற்கை புகுந்திருக்கிறது. புழுதியும் பள்ளமும் மேடும் நிரம்பிய ஒர் இடத்தைச் செப்பனிடுகிருன் ஒருவன். கல், செங்கல், சுண்ணும்பு எல்லாம் போட்டுத் திமிசுக் கட்டையால் இடிக்கிருன். 'இப்போது நிலம் வலிதாயிற்று.” என்று அவன் சொன்னல், அங்கே அது பொருந்தும். அதற்குமுன் அது வலிதாக இல்லாமல், அவன் செய்த காரியங்களால் அது வவி தாயிற்று. ஆகவே, செயற்கையைச் சுட்டுவது.

செயற்கைப் பொருளைச் சொல்லும்போது, அது இன்ன காரணத்தால் இப்படி ஆயிற்று என்று சொல்ல வேண்டுமாம். அதல்ை தெளிவு ஏற்படும். யற்கை யன்று, செயற்கை என்பதை மட்டும் புலப் படுத்தினல் கேட்பவனுக்கு, எப்படி ஆயிற்று? முன்பு எப்படி இருந்தது?’ என்ற சங்தேகங்கள் எழும். ஆகவே, எப்போது, இது இயற்கை அன்று செயற்கை என்று தெரிவிக்கப் புகுகிருயோ, அப்போது இன்ன காரணத்தால் இப்படி ஆயிற்று என்று தெளிவித்து விடுதல் நல்லது என்று சொல்கிருர் தொல்காப்பியர். ‘எருப்போட்டு நீர் பாய்ச்சினதால் பயிர் செழிப் பாயிற்று.” “சின்ன எழுத்தைப் படித்துப் படித்துக் கண் மங்கலாயிற்று” “ஊற்றுப் போட்டுத் துவைத் ததல்ை வேட்டி வெளுப்பாயிற்று. - இப்படிப் பேசினல் தெளிவு ஏற்படுவதற்கு என்ன தடை?

செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல். ஆக்கந் தானே காரண முதற்றே. இந்த இரண்டு சூத்திரங்கள் செயற்கையைப்பற்றி வருகின்றன. காரணத்தால் தன்மை வேறுபட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/59&oldid=646041" இலிருந்து மீள்விக்கப்பட்டது