பக்கம்:வாழும் தமிழ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளிவான பேச்சு 5窗

பொருளே அந்த வேறுபாட்டைப்பற்றிச் சொல்லும் போது ஆயிற்று என்ற சொல்லாகிய ஆக்கம் கொடுத்துச் சொல்லவேண்டும். அப்படி ஆக்கத்தோடு சொல்லும்போது காரணத்தை முதலிற் சொல்விப் பின் ஆக்கத்தைக் கூறவேண்டும் என்பது இவற்றின் பொருள்.

இரண்டாவது சூத்திரத்தின் உரையில் உரை யாசிரியர்கள் சில உதாரணங்களைக் காட்டுகின் றனர். அந்த உதாரணங்களில் ஒன்று கவனிப்பதற்கு உரியது. அதைக்கொண்டு பழங்காலத்துக் காட்சி ஒன்றைப் பின்வருமாறு கற்பனை செய்து கொள்ளலாம்.

ஒரு பெண் ஏதோ நோய்வாய்ப்பட்டாள். அவள் கூந்தல் உதிர்ந்துவிட்டது. இருக்கிற கூந்தலும் கிறம் இழந்து குறுகி அழகிழங்து நின்றது. மறுபடியும். பழைய அழகும் பொலிவும் வரவேண்டுமே! எங்த வைத்தியரிடத்தில் போய் மருந்து வாங்கலாம் என்ற கவலே அந்தப் பெண்மணியின் கணவனுக்கு உண்டாக, வில்லே. பரம்பரையாக வந்த மருந்து அவனுக்குக் தெரியும். கடுக்காயும் எள்ளும் இருந்தால் காலே மாசத்தில் பழையபடி கருகருவென்று கூந்தல் வளரச் .ெ ச ய் து விடலாம். சுத்தமான கடுக்காயாகப் பொறுக்கி எடுத்தான். நல்ல எள்ளை எடுத்து. உலர்த்திப் பிறகு நீரில் ஊறப்போட்டான். பின் அதை எடுத்துத் தன் கையில் வைத்துப் பிழிந்தான். எள்ளிலிருந்து எண்ணெய் வந்தது. அவனுக்கு, அத்தனை பலம் இருந்தது. கையாலே பிழிந்த அந்த எண்ணெயில் கடுக்காயைப் போட்டுக் காய்ச்சித் தன் காதலிக்கு அளித்தான், அவள் அதைத் தேய்த்து ரோடினள். தன் காதலன் பலமும் அன்பும் கலந்து ஆக்கிய எண்ணெய் அல்லவா? அதை தேய்த்துக் கொண்டதால் அவள் உள்ளமும் உடலும் தலையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/60&oldid=646043" இலிருந்து மீள்விக்கப்பட்டது