பக்கம்:வாழும் தமிழ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘52 வாழும் தமிழ்

குளிர்ந்தன. இப்போது மீண்டும் அவள் கூந்தல் அழகி யானுள்.

அந்தப் பெண் கூந்தலழகை இழந்தபோது பார்த்த ஒருவர், மறுபடியும் கூந்தல் வளம் பெற்ற போது பார்த்தார். “எப்படி இந்தக் கூந்தல் நல்ல தாயிற்று?’ என்று கேட்டார். 'கையாலே பிழிந்த எண்ணெயும் கடுக்காயும் சேர்த்துத் தேய்த்துக் கொண்டதால் இப்படி ஆயிற்று ’ என்று பெண்மணி சொல்கிருள். அவள் சொன்னதைக் கான் கேளு வரையர் உதாரணமாக எடுத்துக் காட்டுகிரு.ர்.

'கடுக்கலந்த கைபிழி யெண்ணெய் பெற்றமை யான் மயிர் நல்ல ஆயின’ என்பது அவர் காட்டும் வாக்கியம்.

'இதென்ன கையாலேயாவது எண்ணெய் பிழிவ தாவது' என்று காம் ஆச்சரியப்படுகிருேம்.

- விஷயம் தெளிவாகத் தெரிவதற்கு யாவருக்கும் தெரிந்த உதாரணங்களைச் சொல்லவேண்டும். உரை யாசிரியர் இந்த உதாரணத்தைக் காட்டுவதைக் கொண்டு அந்தக் காலத்துத் தமிழ்நாட்டில் எள்ளேப் பிழிந்து எண்ணெய் எடுக்கும் பலமுள்ள ஆடவர்கள் இருந்தார்கள் என்று சொல்வது பிழையாகாது. அதோடு அப்படிப் பிழிவது பெரிய ஆச்சரியத்துக்கு உரியதன்று என்பதுகூட உண்மை. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/61&oldid=646045" இலிருந்து மீள்விக்கப்பட்டது