பக்கம்:வாழும் தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 சந்தேகமும் தெளிவும்

மனிதன் பல சமயங்களில் சந்தேகப்படுகிற பிராணியாக இருக்கிருன். அவனுடைய கண்ணுலும் அறிவாலும் எடுத்தவுடனே உன்மையை அறிந்து கொள்ள முடிவதில்லே. சங்தேகம் உண்டாகிறது. அந்தச் சங்தேகத்தை அவன் வெளிப்படுத்தும்போது தனக்கு இன்ன விஷயத்தில் சங்தேகம் உண்டென் பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

சிலர் சந்தேகத்தைப் புலப்படுத்துகையில் தம்முடைய பைத்தியக்காரக்கனத்தையும் வெளிப் படுத்தி விடுவார்கள்.

மலேயாளத்து நம்பூதிரிகளைப்பற்றி வழங்கும். கதைகளில் ஒன்று இங்கே கினேவுக்கு வருகிறது. ஒருவன் எதிரே வந்த வேருெருவனேக் கேட்கிருன்: 'யாரோ உங்கள் வீட்டில் செத்துப்போனதாகக் கேள்விப்பட்டேன்; யோ, உன் தமையனு?’ என்று அந்தப் புத்திசாலி கேட்டானும் கேள்வி என்னவோ சந்தேகமாகத்தான் தோன்றுகிறது. ஆனல் அங்கக் கேள்விக்கு அவசியமே இல்லையே! எதிரிலே சாவாத ஒருவன் போகும்போது, செத்தவன் மற்ருெருவன் என்று தெரிந்துகொள்ள முடியாத முட்டாளின் பேச்சுக்கு விடை ஏது?

'ராமனுடைய தாயை மலடியென்று சொன் ர்ைகள்; அது உண்மையா?” என்று ஒருவர் கேட்கிருர். கேள்வியிலே சந்தேகம் தொனிக்கவில்லை; பைத்தியக்காரத்தனங்தான் தொனிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/62&oldid=646048" இலிருந்து மீள்விக்கப்பட்டது